(Reading time: 9 - 18 minutes)
Uyir Ketkum amutham nee...!
Uyir Ketkum amutham nee...!

  

"ஒன்னும் இல்லை அண்ணா, இதெல்லாம் சினிமால தான் வரும்ன்னு நினைச்சேன்.”

  

"ம்ம்ம் சில சமயம் நிஜ வாழ்வில நடக்குறது எல்லாம் சினிமாவையே மிஞ்சிடும்... சரவணன் அங்கிள் இறந்த பிறகு.. ஆன்ட்டிக்கு இந்துவை நினைச்சு ஒரே கவலை...அதனால அவங்க அங்கிளோட அக்கா மகன் சேகரை இந்துக்கு கல்யாணம் பண்ணி வைக்க முடிவு செஞ்சாங்க. எனக்கு தெரிஞ்ச வரையில் இந்து அம்மாக்காக இந்த கல்யாணத்திற்கு சம்மதிச்சாள். பத்திரிக்கை அடிச்சு ஊரை எல்லாம் கூட்டி கல்யாணம் நடக்குற நேரத்தில, அங்க வந்த ஒரு பொண்ணு, சேகர் அவளை ஏற்கனவே பதிவு திருமணம் செய்துக்கிட்டதாக சொல்லி கல்யாணத்தை நிறுத்தினாள். அவள் எதுக்காக கடைசி நிமிஷம் வரைக்கும் காத்திருந்தாள் என்பது தான் புரியாத புதிர். சேகர் கிட்ட கல்யாணத்தை நிறுத்த சொல்லி இருக்கலாம்... இல்லை அவங்க அம்மா கிட்ட பேசி இருக்கலாம்., இல்லை இந்துவையோ அவங்க அம்மாவையோ நேரா பார்த்து முன்னாடியே பேசி இருக்கலாம்.... எதுவுமே செய்யாமல் ஏன் இப்படி கடைசி நிமிஷம் வரைக்கும் காத்திருந்தாள் என்பது அவளை பார்த்த உடனே புரிஞ்சிடுச்சு... அவள் பெயர் நந்தினி... அவளும் எங்க காலேஜ் தான்.... உங்க அண்ணியோட கிளாஸ் மேட்... இந்துக்கும் நந்தினிக்கும் காலேஜில் இருந்தே பகை தான்... ஆனால் அதற்காக இப்படியா? என்னவோ.... “

  

“இப்போ பிரச்னை என்னன்னு பார்த்தால், அன்னைக்கு தன் பேச்சுக்காக கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்ட மகளை, இப்போ திரும்ப கட்டாயப்படுத்த கூடாதுன்னு நினைக்குற ஆன்ட்டி... எனக்கு கல்யாணமே வேண்டாம்ன்னு அடம் பிடிக்கிற இந்து.... சரி பிரெண்ட்ஸ் சொன்னாலாவது இந்து கேட்பாள் என்ற நம்பிக்கையில் தான் ஆன்ட்டி வீணாவையும் உங்க அண்ணியையும் ஹெல்ப் பண்ண கேட்டது... சோ அது தான் இந்த போட்டோவும் ஜாதகமும்...." என்று சொல்லி முடித்தான் ராஜீவ்.

  

பின் அவனே தொடர்ந்தான்..

  

"பை தி வே உனக்கும் நந்தினியை தெரியும்னு நினைக்கிறேன்...."

  

கேள்வியாய் பார்த்த தம்பியை நோக்கியவன்,

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.