(Reading time: 48 - 96 minutes)
Indru nee naalai naan
Indru nee naalai naan

”சொந்தத்துக்கு கூட தான் கட்டுப்படக்கூடாதுன்னுதானே சந்நியாசியாகனும்னு இருக்காரு“

  

”அப்படி இருக்கறவருக்கு எதுக்காக கல்யாணம் செய்து வைக்க எல்லாரும் ஆசைப்படறீங்க இது தப்பில்லை“

  

காவேரியும் டிரைவரும் பேசிக் கொண்டிருப்பதை காவேரியின் தந்தை கவனிக்காமல் இதுவரை நடந்ததை நினைத்துக் கொண்டிருந்தார்.

  

”கொம்பன் ஊருக்கே நல்லது செய்றப்ப ஏதோ அவருக்கு ஒரு நல்லது செய்யனும்னு ஊரு ஆசைப்படக்கூடாதா, காலத்துக்கும் ஊருக்கு துணையா நல்லது கெட்டது பார்க்க ஒருத்தர் வேணாமா, சாமியை கோயில்ல பார்க்கலாம், நம்ம வேண்டுதலை வைக்கலாம் ஆனா, சாமியே கொம்பன் உருவத்தில் வந்து தீர்த்து வைக்கறாரு, நம்ம எல்லாருக்கும் நல்லது செய்றாரு, கருணையில அவர் அந்த கர்ணனையே மிஞ்சினவராச்சே, இதுவரைக்கும் இல்லைன்னோ முடியாதுன்னோ சொன்னது கிடையாது, அவரோட அகராதியில இது இரண்டுத்துக்கும் இடம் இல்லையே”

  

”எல்லாருக்கும் நல்லது செய்றவரு எனக்கும் நல்லது செய்வாரா” என கேட்க டிரைவரின் பார்வை குழப்பத்துக்கு மாறியது

  

”என்ன சொல்றம்மா எனக்குப் புரியலையே”

  

”உங்களுக்கு புரியுது ஆனா, புரியாத மாதிரி நடிக்கறீங்க, உண்மையைச் சொல்லுங்க நீங்களும்தானே கொம்பனுக்கு என்னை கல்யாணம் செய்து வைக்கனும்னு ஆசைப்படறீங்க”

  

”அந்த ஆசை யாருக்குதான் இல்லை நல்லது செய்ற சாமிக்கு நம்மால முடிஞ்சதை செய்றது தப்பில்லையே”

  

”சாமி சாமின்னு சொல்றீங்களே, அந்த சாமியால என்னை பார்த்துக்க முடியுமா, சந்நியாசியா ஆகப் போறவரை தடுக்க நீங்க முயற்சி செய்து என் வாழ்க்கையை பலியாக்க போறீங்களா” என்றாள் கோபமாக அதைக் கேட்ட டிரைவரோ

One comment

  • இது என்னமா புது சீனா இருக்குது. கண்டிப்பா flashback இருக்கும்.

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.