(Reading time: 48 - 96 minutes)
Indru nee naalai naan
Indru nee naalai naan

  

”உன் முறைபொண்ணு வந்து நிக்கற கோலத்தை பார்த்தா எப்படியும் உன் பிரம்மசரியம் இன்னிக்கே மண்ணை கவ்வும்ன்னு நினைக்கறேன்”

  

”சிவாய நம, தப்பு தப்பா பேசி வைக்காத” என திட்டிவிட்டு காவேரியை பார்த்து

  

”என்ன வேணும் உனக்கு” என கேட்க அவளோ

  

”நீதான் கொம்பனோ” என ஏற்றி இறக்கி கேட்டாள்

  

”ஆமாம் இன்னிக்கு வரைக்கும் நான் கொம்பன், நாளையில இருந்து என் பேரு வேற, சந்நியாசி ஆகி காசிக்கு போய் புது பிறப்பு எடுத்து, புது பெயரோட இறைவனுக்கு தொண்டு செய்யப் போறேன்” என பக்தி மார்க்கமாக பேசி வைக்க அவளுக்கு கோபமே வந்தது

  

”ப்ச் ச்சோ” என ராகமிட அவனுக்கு திக்கென்றது

  

”நீ எதுக்கு வந்த அதை சொல்லு”

  

”என்ன கோலம் இது, பண்டாரம் மாதிரி” என்றாள்

  

”சந்நியாசி ஆகப் போறவன் வேற எப்படி இருப்பான்னு நினைச்ச”

  

”முதல்ல இந்த கோலத்தை மாத்தி, உன்னோட அசல் உருவத்தை காட்டு”

  

”எதுக்கு”

  

”அந்த கோலத்திலயாவது நீ நல்லாயிருப்பியான்னு பார்க்கலாம்னுதான்”

  

”முடியாது”

  

One comment

  • இது என்னமா புது சீனா இருக்குது. கண்டிப்பா flashback இருக்கும்.

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.