(Reading time: 30 - 59 minutes)
Indru nee naalai naan
Indru nee naalai naan

”எவனோ செஞ்ச தப்புக்கு நான் பலியாயிட்டேன், கல்யாணமே வேணாம்னு சொல்றவனுக்குதான் நேரத்தோட கல்யாணம் ஆகும், தேவையா எனக்கு, எப்படியிருந்தாலும் அவள் என்னை வாழ விடப்போறதில்லை, அவள் சொன்னபடி இந்த வீடே நரகம் போலதானே இருக்கு, இதுல அந்த ராட்சஸியோட நான் குடும்பம் நடத்தனுமா, செத்தாலும் முடியாது அவளைப் பார்த்தாலே ஓங்கி ஒரு அறை விடனும்னு தோணுது, கையில சிக்கட்டும் ஒரு நாள் அவளுக்கு இருக்கு“ என புலம்ப காவேரியோ அவனது பேச்சைக் கேட்டு வியந்து நேராக அவன் முன் வந்து ஒய்யாரமாக நின்றாள், அவள் வந்து நிற்கவும் கொம்பன் பயந்தேப் போனான் பேச்சே எழவில்லை, அவளோ அவன் முன் தன் ஒரு பக்க கின்னத்தை காட்டி ம் என முனக அவனுக்கு வேர்த்துக் கொட்டியது

  

”ம்ம்ம்” என முனக அவனோ தடுமாறினான் திருதிருவென விழித்தான்

  

”ம் கொடு” என்றாள் ஹஸ்கி வாய்சில் அதில் அவனுக்கு நாக்கு வறண்டே விட்டது

  

”என்னது” என மெதுவாக கேட்க

  

”நீதானே சொன்ன ஒரு அறை விடனும்னு எங்க விடு பார்க்கலாம்” என சொல்ல அவனுக்கு உடல் அதிர்ந்தது.

  

”அய்யய்யோ எல்லாத்தையும் கேட்டுட்டியா”

  

”ஆமாம்” என சொன்னவள் அவனை நேருக்கு நேராக பார்த்து

  

”என்னை பார்த்தா ராட்சஸி போல தெரியுதா” என கேட்க அவனோ ஆம் என பலமாக தலையாட்டினான்

  

”சரியா ஒரு முறை மேல கீழே பார்த்து சொல்லு நானா ராட்சஸி” என கேட்க அவனோ ஏற இறங்கப் பார்த்துவிட்டு எச்சில் விழுங்கி தலையை எல்லா பக்கமும் ஆட்டி வைக்க அவளோ

  

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.