(Reading time: 30 - 59 minutes)
Indru nee naalai naan
Indru nee naalai naan

டம்ளருடன் அங்கு வந்து சேர்ந்தான் கொம்பன், கோபமாக அந்த டம்ளரை அவள் புறம் நீட்டிவிட்டு முகத்தை தூக்கி வைத்துக் கொள்ள அதைக்கண்ட காவேரியோ

  

”பாருங்க பாருங்க அவர் எப்படி என்கிட்ட வெறுப்பை காட்டறாருன்னு, இப்படியிருந்தா நான் எப்படி அவர்கூட சந்தோஷமா வாழறது, இதெல்லாம் வேலைக்கே ஆகாது நீங்க அவரை கூட்டிட்டுப் போங்க”

  

”வேணாம்மா அப்படி சொல்லாதம்மா கல்யாணம் ஆன நாள் அன்னிக்கே பையனை விரட்டினா ஊர்க்காரங்க தப்பா நினைப்பாங்க”

  

”அப்ப அவருக்கு எல்லாத்தையும் சொல்லி புரியவைங்க, என்கிட்ட எப்படி நடந்துக்கனும்னு முதல்ல சொல்லுங்க, அப்புறம் இதுபோல வெறுப்பை காட்டறது, கோபத்தை கொட்டறது, திட்டறது, அடிக்கறது, இந்த வேலையெல்லாம் வைச்சிக்க கூடாதுன்னும் சொல்லுங்க” என்றாள் அதட்டலாக

  

”நாங்க சொல்றோம் அவனுக்கு எல்லாத்தையும் புரியும்படி சொல்றோம், இந்த ஒரு முறை எங்களுக்காக அவனை மன்னிச்சிடும்மா, நீ போ உன் ரூமுக்கு போ நாங்க அவனை சரிகட்டி அனுப்பி வைக்கிறோம் போம்மா” என கெஞ்ச அதில் அவளும் பெருந்தன்மையாக அங்கிருந்து நடந்து தன் அறைக்குச் சென்றாள்.

  

அவள் சென்றதும்தான் தாமதம் கொம்பனின் தாயும் தந்தையும் கொம்பனின் முதுகில் ஆளாளுக்கு ஒரு அடி போட அவனுக்கு வலிக்க வில்லைதான் ஆனாலும் ஆஆ என அலறினான்

  

”என்னை ஏன் அடிக்கறீங்க”

  

”இப்படியாடா நடந்துக்குவ அவளை பாரு கோச்சிக்கிட்டா, இப்படியிருந்தா குடும்பம் நடத்த முடியாது விட்டுக்கொடுத்து போக கத்துக்கடா”

  

”நான் ஏன் விட்டுக்கொடுக்கனும், நானா அவளை கட்டிக்கனும்னு ஒத்தகால்ல நின்னேன்,

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.