(Reading time: 30 - 59 minutes)
Indru nee naalai naan
Indru nee naalai naan

சொல்றீங்களே அவளுக்கும் கொஞ்சம் சொல்லுங்களேன்“

  

”அவள் ரொம்ப தெளிவா இருக்கா, நீதான் குழம்பிப் போயிருக்க முதல்ல நீ மாறனும் கல்யாணம் ஆன பின்னாடி கூட திமிரா நடந்துக்கிட்டா எப்படி, இது என்ன உன்னோட வீடா, உன் இஷ்டப்படி ஆடறதுக்கு, பாடறதுக்கு, இது உன்னோட புகுந்த வீடு, இங்க உனக்கு மாமனார் இருக்காங்க, நல்லவேளை மாமியார், மச்சான் இல்லை மச்சினி இல்லை, எவ்ளோ நல்லவிசயம் தெரியுமா, இல்லைன்னா நீ எல்லார்கிட்டயும் பேச்சு வாங்க வேண்டியிருக்கும் இது உனக்குத் தேவையா சொல்லு”

  

”எனக்கு கண்ணு கட்டுது, இப்ப முடிவா என்னதான் சொல்லவர்றீங்க”

  

”இந்த ஜென்மத்தில நாங்க எப்படி உனக்கு அப்பா அம்மாவோ அதே போல அவள் உன் பொண்டாட்டி அவளோடதான் நீ வாழனும்னு உன் தலையெழுத்துல இருந்தா அதை யாராலயும் ஏன் சிவனால கூட மாத்த முடியாது, ஒழுங்கா அவளோட வாழற வழியை பாரு, அவள் கண்ல ஒரு சொட்டு கண்ணீர் வந்ததோ உன்னை நிஜமாவே குருடனாக்கிடுவேன் ஜாக்கிரதை” என இருவரும் மிரட்ட கொம்பனுக்கு பேச்சே வரவில்லை. நொந்தபடியே ஜுஸ் டம்ளருடன் காவேரியின் அறைக்குள் பிரவேசித்தான்.

  

அவளோ உறங்காமல் படுக்கையில் அமர்ந்திருந்தாள், கொம்பன் வரவும் அலுத்துக் கொண்டாள்

  

”எவ்ளோ நேரம் ஜுஸ்க்காக காத்திருக்கறது, கொஞ்சம் கூட பொறுப்பேயில்லை உனக்கு இப்படியா லேட் பண்ணுவ கொடு கொடு” என கைநீட்ட அவனும் ஜுஸ் டம்ளரை அவளிடம் தந்துவிட்டு கைகட்டி நின்றான், அவளும் கால்களை ஆட்டியபடியே ஜுஸ் பருகி

  

”ப்ச் என்ன இது”

  

”ஆரஞ்சு ஜுஸ்“

  

”போ போய் ஆப்பிள் ஜுஸ் கொண்டுவா, எனக்கு ஆரஞ்சு பிடிக்காது இந்தா பிடி” என சொல்லி டம்ளர் நீட்ட அவனோ அதை வாங்கி

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.