(Reading time: 30 - 59 minutes)
Indru nee naalai naan
Indru nee naalai naan

காசிக்கு போய் சேர்ந்திருக்கலாம்”

  

”நீ காசிக்கு என்ன நரகத்துக்கு போனாகூட உன் முறைபொண்ணு உன்னை தேடி வந்து நின்னிருப்பா வீணா ஆசையை வளர்த்துக்காத”

  

”எனக்கு இந்த வாழ்க்கையே பிடிக்கலை”

  

”என்ன செய்றது எல்லாருக்கும் பிடிச்ச வாழ்க்கையா அமைஞ்சிருக்கு, கிடைச்ச வாழ்க்கையை பிடிச்ச மாதிரி எல்லாரும் வாழ்ந்துட்டு போறதில்லையா, அதே போல நீயும் வாழ்ந்துக்க நண்பா, வேற வழியில்லை ஆம்பளைங்க நாமதான் விட்டுக்கொடுத்து போகனும், அனுசரிச்சி நடந்துக்கனும், இப்ப என்ன சொன்னாலும் உனக்கு புரியாது அனுபவம் இல்லை புதுசு வேற போக போக தன்னால நீயே எல்லாம் கத்துக்குவ”

  

”போடா” என்றான் சலிப்பாக

  

”உன்னைப் பார்க்கறப்ப எனக்கு ஒரு கதை ஞாபகத்துக்கு வருது சொல்லவா”

  

”இங்க என் கதையே சிரிப்பா சிரிக்குது இதுல தனிக்கதை வேற கேட்டு வைக்கனுமா நானு“

  

“அட கேளுப்பா அதுவும் சந்நியாசி சம்பந்தப்பட்ட கதைதான்“

  

”சந்நியாசியா சொல்லு கேட்போம்“

  

”ஒரு ஊர்ல ஒருத்தன் இருந்தான், குடும்பம்லாம் இல்லை, கல்யாணமும் ஆகலை, தனியாளு அவனுக்குன்னு ஒரு வீடு, கடவுள் பக்தி அதிகம், ஒருநாள் நமக்குதான் யாருமில்லையே நாம ஏன் சந்நியாசியா ஆயிடக்கூடாதுன்னு முடிவு எடுத்து அதே போல சந்நியாசியும் ஆனான் அவன் நேரம் பாரு அந்த வீட்ல எலி தொல்லை அதிகமாயிடுச்சி, அவனால நிம்மதியா வாழமுடியலை சரி, எலியை ஒழிக்க பூனையை வாங்கிட்டு வந்து வளர்த்தான், பூனை வந்தபின்னாடி எலிதொல்லை குறைஞ்சிடுச்சி ஆனா அந்த பூனை பசியில கத்தவும் அதுக்கு பால் வாங்கித் தந்தான். அதுவும் பால் குடிச்சது, பால் விலையை சமாளிக்க முடியாம ஒரு பசுமாட்டை வாங்கினான், அதுல இருந்து பால் கறந்து அவனும்

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.