(Reading time: 30 - 59 minutes)
Indru nee naalai naan
Indru nee naalai naan

”நான் அவளோட அப்பா”

  

”ம்க்கும் எனக்கே இங்க உரிமையில்லை, உங்களுக்கென்ன வந்தது, அவள்தான் சொன்னா யாரையும் உள்ள விடாதீங்கன்னு“

  

”அப்படியா சரி சரி ஆமா நீ என்ன இங்க இருக்க, உனக்கு களைப்பா இல்லை போய் நீயும் ஓய்வெடு“

  

”அதெல்லாம் வேணாம் நான் நல்லாதான் இருக்கேன் நீங்க போங்க”

  

”சரி மாப்பிள்ளை எனக்கு களைப்பா இருக்கு, நான் போய் ஓய்வெடுக்கறேன்” என சொல்லிவிட்டு அவர் சென்றுவிட ஓய்ந்துப் போய் காவேரியின் அறை முன் அமர்ந்து காவல் காத்தான் கொம்பன்

  

”கொம்பா இங்க உட்கார்ந்து என்ன செய்ற” என கணக்குபிள்ளை கேட்க அதற்கு கொம்பன்

  

”பார்த்தா தெரியலை வேற யாரும் வந்துடக்கூடாதுன்னு காவல் காக்கறேன்”

  

”அப்பாடா இப்பதான் நீ கொஞ்சம் கொஞ்சமா நல்ல குடும்பஸ்தனா மாறிக்கிட்டு வர்ற இதை இப்படியே கடைபிடி உன் வாழ்க்கை ஓஹோன்னு மாறும்பாரு”

  

”எப்படியிருந்தவனை இப்படி ஆக்கி வைச்சிருக்கா, இதுல என் வாழ்க்கை ஓஹோன்னு மாறிடுமா போடா போய் வேலையை பாரு ஆமா வக்கீலை என்ன செய்த”

  

”அவரை அப்பவே அனுப்பிட்டேன்“

  

”ஏன்டா”

  

”அதான் உனக்கு கல்யாணம் ஆயிடுச்சில்லை, இனி எங்க நீ சந்நியாசியாகப் போற, அதனால அவருக்கு வேலையில்லை அனுப்பிட்டேன்”

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.