(Reading time: 30 - 59 minutes)
Indru nee naalai naan
Indru nee naalai naan

  

”அப்போ அந்த சாமியாரை”

  

”நீ எப்ப உன் முறைப்பொண்ணுக்கு தாலிகட்டினியோ அப்பவே அங்கிருந்து கோபமா போயிட்டாரு”

  

”அடடா சே இருந்த பிரச்சனையில அவரை நான் கவனிக்கலை, என்னை அவரு தப்பா நினைச்சிருப்பாருல்ல”

  

“விடு நண்பா இதுக்கெல்லாம் வருத்தப்படாத எல்லாம் திடீர்ன்னு நடந்ததால யாரை தப்பு சொல்லி என்ன பிரயோசனம் எல்லாம் பார்த்துக்கலாம்”

  

”அப்புறம் நாய்களை வாங்க வந்தவனும் போயிட்டானா”

  

”இல்லையே அவனை நான் அனுப்பலை”

  

”ஏன்டா அவனையும் அனுப்பிட வேண்டியதுதானே”

  

”எதுக்கு அனுப்பனும்”

  

”எதுக்கா இனிமேல நாய்களை நான்தான் பார்த்துக்கனும், அதுங்களை ஏன் விக்கனும்”

  

”என்னப்பா விளையாடறியா உனக்கு இப்ப கல்யாணம் ஆயிடுச்சி பொறுப்பா குடும்பத்தை பார்த்துக்காம நாய்களை பராமரிக்க போவியா அதெல்லாம் உன்னை விடமாட்டாங்கப்பா”

  

”டேய் என்னடா இது கேலிகூத்தா இருக்கு, என் வேலையை நான் செய்யக்கூடாதா”

  

”எதுக்கும் நீ உன் புகுந்த வீட்டுக்காரங்க கிட்ட இதைப்பத்தி கேட்டுக்க அவங்க மறுத்தா விட்டுடனும் தகராறு செய்யக்கூடாது”

  

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.