(Reading time: 36 - 72 minutes)
Indru nee naalai naan
Indru nee naalai naan

”அடப்பாவி பொண்ணுங்களை தெய்வமா பார்க்கற நீயா அவள்கிட்ட முறைகேடா நடந்துக்கிட்ட சே உன்னை என் புள்ளைன்னு சொல்லிக்கவே அசிங்கமா இருக்கு”

  

”அம்மா என்னம்மா இப்படி பேசறீங்க, அவள் யாரு நான் தாலிகட்டின பொண்டாட்டிதானே அவளை தொட எனக்கு உரிமையில்லையா”

  

”தாலி கட்டிட்டா எல்லாம் ஆச்சா எப்படி நீ தாலிகட்டின, உனக்கு பிடிச்சா கட்டின இல்லை அவளுக்கு பிடிச்சி உன்னை கட்டிக்கிட்டாளா, சந்தர்ப்ப சூழ்நிலை எங்க தன் அப்பா தன்னை விட்டு போயிடுவாரோன்னு பயந்து பிடிக்கலைன்னாலும் உன்கிட்ட தாலி கட்டிகிட்டா, அவளை போய் தப்பான எண்ணத்தோட தொடப்பார்த்தியே அந்த கையை காட்டு இப்பவே சூடு வைக்கறேன்” என சொல்லிய அவனின் தாய் வேக வேகமாக எங்கோ செல்ல கொம்பனோ தன் தந்தையிடம் தன் சூழ்நிலையை விளக்க முயன்றான் பலனில்லை அவரும் அவனை ஏதோ ஒரு காமுகன் போல நினைத்து திட்டி தீர்க்க அதற்குள் அவனது தாய் வந்தாள் கையில் கொள்ளிகட்டையுடன் அதைக்கண்டதும் அதிர்ந்தான் கொம்பன்

  

”கையை காட்டுடா சூடு வைக்கிறேன்”

  

”அய்யோ அம்மா இனிமேல நான் அவளை தொடமாட்டேன் என்னை நம்பும்மா”

  

“போதும்டா உன்னை நான் நம்பினது, அவள்கூட பழகி நல்லபேர் எடுத்து மெதுமெதுவாக அவள் மனசுல இடம்பிடிச்சி வாழ்க்கையை வாழ்வேன்னு பார்த்தா ஆம்பளைங்கற அகங்காரத்தில நீ தப்பு மேல தப்பு செய்வ, அதை நான் பார்த்துக்கிட்டு இருக்கனுமா தப்பு யார் செய்தாலும் தப்புதான், இதே உங்கப்பா என்கிட்ட செய்திருந்தாலும் சூடு வைச்சிருப்பேன் காட்டுடா கையை” என உக்கிரமாக கத்த அவனோ நொந்துப் போய் கையை நீட்டினான். சூடு வைக்கப்பட்டது அவனது கண்கள் கலங்கியது, என்ன சூடு பட்டதால் ஏற்பட்ட வலியால் அல்ல மாறாக தன்னை தன் பெற்றோர்கள் கேவலமாக நினைத்து விட்டார்களே என்ற அவமானத்தில் கண்கள் கலங்கினான்

  

”போதும் இனி நீ இங்க இருக்க கூடாது இது என்னோட வீடு, உன் வீடு அதுதான் கிளம்பு போ உன் மாமனார் வீட்டுக்குப் போ, சும்மா சும்மா தொட்டதுக்கெல்லாம் இந்த வீட்டுக்கு நீ

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.