(Reading time: 36 - 72 minutes)
Indru nee naalai naan
Indru nee naalai naan

”இப்ப உன் கையை பிடிச்சது கூட ஆசையில இல்லை இப்படி வா” என அவனை அழைத்தபடி படுக்கையில் அமர வைத்தவள் அங்கிருந்த அலமாரியில் இருந்து எதையோ தேடி பிடித்து அவனிடம் வந்தாள்

  

”என்னது இது”

  

”ஆயின்மென்ட் இது தடவிவிடறேன் சீக்கிரமா இந்த சூட்டுக்காயம் குணமாயிடும்”

  

”ம் ஆமா இந்த காயம் ஆறினா என்ன ஆறலைன்னா என்ன என் மனசுல பட்ட காயம் ஆறவே ஆறாது” என சொல்ல அவளோ ஆயின்மென்ட் தடவிவிட்டு அவனை ஏறிட்டுப்பார்த்தாள்

  

”உன்னாலகூட என் மனசுல நிறைய காயம் பட்டது, இப்ப வரைக்கும் அது ஆறலை என் வலியை நான் யார்கிட்ட போய் சொல்லி அழறது சொல்லு பார்க்கலாம்”

  

”என்னால உண்டான வலியை என்கிட்ட சொன்னாதானே எனக்குப் புரியும், அப்படி என்ன வலி வந்தது உனக்கு” என கேட்க அவள் பெருமூச்சுவிட்டு படுக்கையில் அமர்ந்து முதல் முதலில் அவளுக்கு திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டது, அது தடங்கலானது, நின்றது, அதனால் ஏற்பட்ட மனவலி அவமானம் ஊர்மக்களின் ஏச்சுகள் பேச்சுகள் என சொல்லலானாள். கடைசியாக 7வது முறை ஏற்பாடு செய்த திருமணம் நின்றது வரை சொல்லி முடித்து ஓய்ந்தாள். அவளின் கண்கள் கலங்கியிருந்தது, அதை விட அவனது கண்கள் குளமாகிப் போனது. எப்பேர்ப்பட்ட கொம்பன் எதற்கும் அஞ்சாதவன் இப்போது கண்கள் கலங்கி குற்ற உணர்வில் தவித்தான்

  

”எனக்கு இது எதுவும் தெரியாது முதல்லயே இந்த விசயத்தை யாராவது எனக்கு சொல்லியிருந்தா நான் இந்த ஊர்க்காரங்களை அடக்கியிருப்பேன், நாலு பேருக்கு நல்லது செய்தா புண்ணியம் வரும்னு நினைச்சேன் ஆனா, உனக்கு பாவம் செய்துட்டேன் என்னை மன்னிச்சிடு இந்த பாவத்தை நான் எங்க போய் கரைப்பேன்னு தெரியலையே, ஈசனே இது என்ன சோதனை, எதுக்காக இந்த பழி பாவத்தை எனக்கு தந்த முக்தி வேணும்னு ஆசைப்பட்ட எனக்கு அது கிடைக்காம செய்துட்டியே, ஒரு பொண்ணுக்கு நான் இழைச்ச

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.