(Reading time: 36 - 72 minutes)
Indru nee naalai naan
Indru nee naalai naan

பாவத்துக்கு கண்டிப்பா எனக்கு முக்தி கிடைக்காது மறுஜென்மம் எடுத்து மீண்டும் உனக்கு தொண்டாற்றுவேன் நமசிவாய” என புலம்ப அதைக்கேட்ட காவேரியோ

  

”ஈசனே கொம்பனுக்கு மறுஜென்மம் கொடுக்கறப்ப எனக்கும் மறுஜென்மம் கொடுங்க” என சொல்ல கொம்பன் குழம்பினான்

  

”எதுக்கு இப்படி வேண்டிக்கற”

  

”பின்ன நீ மறுஜென்மம் எடுத்தா நானும் மறுஜென்மம் எடுக்கனும்ல”

  

”விளங்கலையே“

  

”ஆமா இந்த ஜென்மத்தில நீ எனக்கு புருஷன்னா அடுத்த ஜென்மத்திலயும் நீதானே எனக்கு புருஷனா வரனும் அதுக்கு சொன்னேன்”

  

”அடுத்த ஜென்மத்திலயும் நீதானா வேணாமே அடுத்த ஜென்மத்திலயாவது நான் சந்நியாசியாகி காசிக்கு போய் முக்தியடையலாம்னு இருக்கேன், அதனால நீ என்ன செய்றன்னா இந்த ஜென்மத்திலேயே முக்தியடைஞ்சிடு அடுத்த ஜென்மமே எடுக்காத சரியா” என சொல்ல அவளோ கோபமாக முறைக்க அந்நேரம் அதைக்கேட்டபடி வந்த அவனது தாயோ அதிர்ந்து

  

”டேய் நீ திருந்தவே மாட்டியா கையில சூடு வைச்சும் என்ன பேச்சு பேசற, பாரு என்னதான் கோபம் இருந்தாலும் இன்னும் வாழவே ஆரம்பிக்காத என் மருமகள்கிட்ட முக்தியடைஞ்சிடுன்னா சொல்வ உன்னை”  என கொம்பனை அடிக்க வர அவனோ தப்பித்து ஓட அதில் காவேரிக்கு சிரிப்பே வந்தது கலகலவென சிரித்தாள்.

  

கொம்பனோ அந்த வீடு முழுக்க ஓடினான் தாயிடம் தப்பிக்க போராடினான். சண்முகம் வந்தார் கூடவே கொம்பனின் தந்தை வந்தார்

  

”என்னாச்சி எதுக்காக கொம்பனை விரட்டற” என கேட்க அதற்கு

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.