(Reading time: 36 - 72 minutes)
Indru nee naalai naan
Indru nee naalai naan

”எதுக்கு வம்பு தவறி என் கைபட்டா கூட எனக்குதான் சூடு கிடைக்கும் அம்மா தாயே தள்ளி போம்மா” என சொல்ல வேண்டுமென்றே அவனை உரசினபடி நடந்துவர அவனுக்கு தூக்கிவாரிப் போட்டது

  

”தள்ளி போன்னா என் பக்கம் வர்ற”

  

”எந்த பக்கம்னு சொல்லலையே”

  

”அந்த பக்கம்“

  

”எந்த பக்கம்”

  

”உன்னோட” என கோபத்தில் அவளை தள்ளிவிட அதில் தடுமாறி தரையில் விழுந்தாள் காவேரி அவள் விழவும் வீட்டினர் அனைவரின் பார்வை அவன் மீது விழ நடுநடுங்கிப் போனான் கொம்பன்.

  

”நான் இல்லை அவளாதான் விழுந்தா” என சொல்ல அனைவருமே காவேரியை பார்க்க அவளோ

  

”அவர்தான் என்னை தள்ளிவிட்டாரு” என சொல்ல கொம்பனுக்கு ஏதோ சங்கு ஊதும் சத்தம் கேட்டது. நல்லவேளை யாரும் அவனை தண்டிக்கவில்லை மாறாக அவனுக்கு டிபன் தராமல் பட்டினி போட்டார்கள். மற்றவர்கள் சாப்பிடுவதையே வெறிக்க வெறிக்க பார்த்த கொம்பன் தன் பக்கத்தில் இருந்த கணக்குபிள்ளையை பார்த்து

  

”ஏன்டா எனக்குதான் தண்டனை தந்தாங்க உனக்கென்ன கேடு நீ போய் சாப்பிட வேண்டியதுதானே”

  

”என்னதான் இருந்தாலும் நீ என் உயிர்நண்பனாச்சே நீயே பட்டினி கிடக்கறப்ப நான் எப்படி சாப்பிடறது, எத்தனை நாள் நான் பட்டினியா இருந்தப்ப எனக்கு நீ சாப்பாடு தந்த, ஒரு நாள் உனக்காக பட்டினி கிடக்கறது எனக்கு கஷ்டமில்லை கொம்பா” என சொல்ல கொம்பனுக்கு

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.