(Reading time: 36 - 72 minutes)
Indru nee naalai naan
Indru nee naalai naan

இந்த பேச்சுக்கள் ஆறுதலாக இருந்தது.

  

”பரவாயில்லை நீயாவது என்கூட துணையா இருக்கியே சந்தோஷம் அட மறந்தே போயிட்டேன், நாய்கள் என்னாச்சின்னு தெரியலையே, அதுகளுக்கு சரியான நேரத்துல சாப்பாடு போட்டாங்களேன்னும் தெரியலையே”

  

”அடடா கொம்பா நம்ம நாய்கள் நீ சாப்பாடு போட்டாதானே சாப்பிடும், மத்தவங்க போட்டா சாப்பிடாத அப்படின்னா அதுகளும் இப்ப பட்டினியாதான் இருக்குதுங்களா”

  

”வாடா போய் பார்த்துட்டு வரலாம் கிளம்பு” என சொல்லிவிட்டு எழுந்து நிற்க கணக்குப்பிள்ளையோ அதிர்ந்தான்

  

”என்னப்பா நீ பாட்டுக்கு எழுந்து போற, அங்கல்லாம் போக கூடாதுன்னு உனக்கு சொன்னாங்கள்ல மறந்துட்டியா”

  

”அதுக்காக வாயில்லாத ஜீவன்களை பட்டினி போட வைக்கலாமா”

  

”வாஸ்தவம்தான் எதுக்கும் சொல்லிட்டு போகலாமே இல்லைன்னா அதுக்கும் தண்டனை தருவாங்க”

  

”சரி அம்மாட்ட சொல்லிட்டு கிளம்பலாம்”

  

என சொல்ல கணக்குப்பிள்ளை கலகலவெனச் சிரித்தான்

  

”என்னடா சிரிப்பு”

  

”இன்னும் நீ பச்சைபுள்ளையாவே இருக்கியேப்பா உனக்கு நேத்தே கல்யாணம் ஆயிடுச்சி, இனிமேல நீ எங்க போனாலும் என்ன செய்தாலும் அனுமதி கேட்க வேண்டியது உன் அம்மாகிட்ட இல்லை உன் கையால தாலிவாங்கி கட்டிக்கிட்டாளே உன் முறைபொண்ணு அவள்கிட்டதான், அங்க பாரு அவளே வர்றா சொல்லிட்டு வா கிளம்பலாம்” என சொல்ல கொம்பன் நொந்தபடியே தனது முறைபெண்ணை எதிர்கொண்டான்

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.