(Reading time: 36 - 72 minutes)
Indru nee naalai naan
Indru nee naalai naan

  

”போ” என்றான் அதுவோ பல்லை நறநறவென காட்டி உரும அதே போல அவனும் செய்து வைக்க அதில் அதுவும் அமைதியாகி விலகி சென்றது.

  

”நாயோட பழகி பழகி நாய் பாஷை கூட கத்து வைச்சிருக்க போல இருக்கே” என்றாள் கிண்டலுடன் அவனோ அவளைப் பார்த்து

  

”கொழுப்பு உனக்கு எனக்கென்ன வந்ததுன்னு உன்னை விட்டுட்டு போயிருந்தா நாய்கிட்ட கடிவாங்கி கஷ்டப்பட்டிருப்ப அய்யோ பாவம்னு காப்பாத்தினேன்னு பாரு என்னை சொல்லனும்”

  

”நானா வந்து என்னை காப்பாத்து கொம்பான்னு உன்னை கூப்பிட்டேனே அப்படி எதுவும் நினைவில்லையே”

  

”பேசு பேசு என்னென்ன பேசனுமோ பேசு” என சொல்லியவன் மற்ற நாய்கள் அவர்களையே பார்ப்பதைக்கண்டு காவேரியை அனைத்து நாய்களின் முன் நிப்பாட்டி

  

”இவள் என் முறைபொண்ணு, இவளை யாரும் எதுவும் செய்யக்கூடாது சரியா” என சொல்ல அவைகளுக்கு புரிந்ததோ இல்லையோ வாலை நன்றாக ஆட்டியது

  

”பரவாயில்லையே உன் நாய்களுக்கு நாம பேசறது புரியும் போல, நீ சொன்னதும் அமைதியாகி வாலாட்டுது“

  

”எல்லாம் என் ட்ரெயினிங்தான் இதெல்லாமே என் செல்லம்ங்க” என சொல்லிவிட்டு ஓரிடமாக அமர்ந்தவன் விசில் அடித்தான் உடனே அனைத்து நாய்களும் அவனை சூழ்ந்துக் கொண்டது. ஒவ்வொரு நாயையும் முதுகில் தடவி கொடுத்து என்னடா தங்கம் என்ன வேணும் உங்களுக்கு என பாசமாக அதனுடன் உரையாடிக் கொண்டிருக்க அதைக்கண்ட காவேரியோ

  

”என்ன இனம் இனத்தோட சேர்ந்துடுச்சி போல இருக்கே கடைசியில நாய்க்காரனா என்

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.