(Reading time: 36 - 72 minutes)
Indru nee naalai naan
Indru nee naalai naan

  

”அய்யோ அப்படி பேசி கொல்லாத”

  

”உண்மையை சொல்லு இப்ப உன் மனசு என்ன சொல்லுதுன்னு என்கூட உறவாடனும்னுதானே சொல்லுது சொல்லு கொம்பா”

  

என கேட்க கேட்க அவனுக்கு திக்கென்றது, உண்மையில் அவனது மனமும் அவளுடன் உறவாடவே ஆசைக் கொண்டது, கைகால் நடுங்கியது விட்டால் அவளை சொந்தமாக்கிக்கொள்ளும் அளவு துடிப்புடன் இருந்தான் பதில் சொல்ல தவித்தான் அவளையே ஏற இறங்கப் பார்த்து ரசித்தான், அழகு, கொள்ளை அழகு தனக்குதானே அனுபவித்தால் என்ன என்ற எண்ணம் அவனை அசைத்துப் பார்த்தது மெதுவாக தன் கையால் அவளது தோளை தொட முனைந்தான் காவேரியோ

  

”கொம்பா என் மேல உன் கை பட்டது உன் கழுத்தை வெட்டிடுவேன்” என மிரட்டினாள் இன்னும் அருவாள் அவனது கழுத்தில் நீங்காமல் இருந்தது. என்னதான் அருவாளை இறுக்கமாக பிடித்திருந்தாலும் அவளின் உடல் அதிர்ந்தபடிதான் இருந்தது

  

அவனையும் மீறி அவனது கைகள் செயல்பட்டது பட்டென அவளது தோளை பிடித்து தன் பக்கம் இழுக்க ஆரம்பித்தான் அவளோ அலறினாள்

  

”கொம்பா விடு என்னை” என சொல்லிப் பார்த்தான் அவனது காதில் விழவில்லை சட்டென அவனது கையில் அருவாளால் ஒரு கீறல் போட்டாள் அதன் வலியில் கையை எடுத்து உதறினான்

  

”ஆஆ வலிக்குது” என அலறினான்

  

”வலிக்குதா வலிக்கட்டும் நீ என்னை தொட்டாலும் இப்படித்தான் தீயா சுடுது எனக்கும் உயிர் போற வலி ஏற்படுது” என சொல்ல அவன் திடுக்கிட்டான்

  

”நான் உன்னை தொட்டா உனக்கு தீயா சுடுதா”

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.