(Reading time: 20 - 40 minutes)
Indru nee naalai naan
Indru nee naalai naan

சிந்தனையுடனே வீட்டிற்குச் சென்றான்.

  

அங்கு அவனது வரவிற்காகவே காத்திருந்தாள் காவேரி வந்தவனை கண்டதும்

  

”எங்கடா போன” என கோபமாக கேட்க அவனோ அவளைப் பார்த்து

  

”சும்மா கத்தாத நானே முக்கியமான வேலையா போய் வரேன்”

  

”அதென்ன முக்கியமான வேலை வீட்டை விட்டு ஓடறதில்லையே இரு“

  

”நான் எங்கயும் ஓடலை இங்கதானே இருக்கேன், நானே யோசனையில இருக்கேன் நீ ஒண்ணு”

  

”என்ன விசயம் சொல்லு”

  

”உனக்கு யாராவது தெரிஞ்சவங்க காதலிக்கறவங்க இருக்காங்களா தெரியுமா”

  

”என்ன உளர்ற”

  

”அதான்மா காதலிக்கறவங்க யாராவது உனக்கு தெரிஞ்சவங்க இருக்காங்களா” என கேட்க அவளுக்கு அவனின் பேச்சு தினுசாக இருந்தது

  

”என்னது காதலிக்கறவங்களா அதுசரி இப்ப எதுக்கு நீ அவங்களை தேடற”

  

”நான் காதலிக்கறதுக்கு” என சொல்ல அவளோ அதிர்ந்தாள்

  

”என்ன உளர்ற கட்டின பொண்டாட்டி கண்முன்னாடி வைச்சிக்கிட்டு இன்னொருத்தியை காதலிக்கறேன்னு சொல்ற எவ்ளோ தைரியம் உனக்கு” என அவனை அடிக்க வர அவனோ அவளை தடுத்து நிப்பாட்டினான்

  

”இன்னொருத்தியை காதலிக்கற அளவுக்கு கொம்பன் ஒண்ணும் கேடுகெட்டவன் கிடையாது”

3 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.