(Reading time: 27 - 53 minutes)
Indru nee naalai naan
Indru nee naalai naan

  

”வேணாம் காவேரி இதோட நிப்பாட்டிக்க“

  

”என்னடா பயப்படறியா உனக்கு ஒண்ணுன்னு வந்தா உடனே துடிச்சிப் போற, ஏன்டா நான் என்ன கேனையா நீ மன்னிப்பு கேட்டதும் நான் உடனே உன்னை மன்னிக்கறதுக்கு, நான் உனக்கு செஞ்சதை நீ மறக்கமாட்ட கண்டிப்பா என்னை பழிவாங்குவன்னு எனக்குத் தெரியும், அதனாலதான் ஊர் முன்னாடி உன்னை மன்னிச்சி ஏத்துக்கற மாதிரி நடிச்சேன்

  

இதனால ஊர்க்காரங்க முன்னாடி நான் பாவம் எனக்கு நடந்த கொடுமையை மறந்து கொம்பனை ஏத்துக்கிட்டதால இனி நான் என்ன செய்தாலும் யாரும் கண்டுக்க மாட்டாங்க, தப்புன்னு சொல்லமாட்டாங்க, ஊர்க்காரங்க இப்ப என் பக்கம், கொம்பனே தான் செய்த தப்பை நினைச்சி வருந்தி மன்னிப்பு கேட்டான்னா அப்ப காவேரிக்கு எவ்ளோ அவமானம் நடந்திருக்கும், அதுக்கு நாமதானே காரணம்னு நினைச்சி இந்த ஊர்க்காரங்க குற்ற உணர்ச்சியில இருப்பாங்க

  

எப்படி பார்த்தாலும் எனக்குதான் வெற்றி, நீ மறுபடியும் தோத்துட்ட அய்யோ பாவம் என்ன நமக்குள்ள நடக்கற இந்த ஆடுபுலி ஆட்டம் இருக்கே இது வெளியாளுங்களுக்கு தெரியாது தெரிஞ்சா எனக்கு கவலையில்லைப்பா, இனி இந்த வீடே உனக்கு நரகம் போல மாறப்போகுது பாரு” என சொல்ல அவனோ நொந்துப் போனான்.

  

”என்னை ஜெயிச்சிடலாம்னு நினைப்பா நான் ஆம்பளைடி எப்படியிருந்தாலும் நான் சமாளிச்சி மேல வந்துடுவேன்”

  

”தப்பு கொம்பா நான் ஜெயிக்க நினைக்கறது உன்னையில்லை உனக்குள்ள இருக்கே இந்த ஆம்பளைங்கற திமிரை, இந்த திமிரு அழிஞ்சாதான் உண்மையில நான் பட்ட கஷ்டத்தை உன்னால உணரமுடியும்”

  

”என்னடி பெரிய கஷ்டம் கஷ்டம்னு ஒப்பாரி வைக்கற உனக்காக இந்த ஊர் முன்னாடி நான் மன்னிப்பு கேட்டேனே எனக்கு எப்படியிருந்தது தெரியுமா அவமானத்தில நிக்க கூட முடியலை எனக்கு நடந்த அவமானத்துக்கு உன்னை பழிவாங்க வந்தா நீ என்கிட்டயே

3 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.