Page 2 of 20
”அதே போலதான் பவானிக்கும் நான் செய்யனும்னு ஆசைப்படறேன் இது தப்பா”
”தப்பேயில்லை தாராளமா செய்ங்க” என சொல்லிவிட அவனோ மனம் மகிழ்ந்து
”அப்போ நான் என் வீட்டுக்குப் போறேன்“
”என்ன பழக்கம் இது அடிக்கடி உங்க அம்மா வீட்டுக்கு போய் வர்றீங்க, பார்க்கறவங்க என்ன நினைப்பாங்க“
”இல்லை பவானியோட நினைவு நாளுக்கு படைக்கனும் அதுக்காக போறேன்”
”ஏன் இங்க செய்யக்கூடாதா“
”இங்கயா இங்க எப்படி“
”என்ன எப்படி”
”இல்லை உனக்கு சங்கடமா இருக்குமேன்னுதான்“
”எனக்கு எந்த சங்கடமும் இல்லை தாராளமா செய்ங்க”
”சரி நான் போய் ஒரு புடவை வாங்கிட்டு வரேன்”
”எதுக்கு”
”பவானிக்கு படைக்கறப்ப துணி வேணாமா”
”முதல்ல பவானியோட போட்டோ கொண்டு வாங்க”