”அதுவா இருக்கு இருக்கு நீ எல்லாம் கொண்டு வா போ” என சொல்ல அவளும் எழுந்து சென்றாள்.
அவனோ பதட்டமானான்
”இப்ப என்ன செய்றது கரெக்டா போட்டோவை கேட்கறாளே, இவளை சமாதானம் செய்யலாம்னு பார்த்தா இப்படி வசமா மாட்டிக்கிட்டோமே” என அவன் மனதில் புலம்புவதற்குள் ஹரிணி தான் செய்த உணவை கொண்டு வந்து அடுக்கினாள். அனைத்துமே பவானிக்கு பிடித்தது, அதைக்கண்டு அதிர்ந்த தருணோ
”ஹரிணி”
”ம்”
”இதெல்லாம் எப்படி“
”நான்தான் செய்தேன்”
”இல்லை இது எல்லாம் பவானிக்கு பிடிச்ச உணவுகளாச்சே“
”ஓ அப்படியா எனக்கு தெரியாது, ஏதோ தெரிஞ்சதை செய்தேன்”
”என்னிக்காவது நான் உன்கிட்ட பவானிக்கு பிடிச்ச உணவுகள் பத்தி சொல்லியிருக்கேனா”
”இல்லையே“
”அப்புறம் எப்படி கச்சிதமா செய்திருக்க“
”இதப்பாருங்க இருக்கற காய்கறிகளை வைச்சி சமைச்சி வைச்சிட்டேன், பிரிட்ஜ் காலி