நாளைக்கே காய்கறி வாங்கி அடுக்கனும், அதை நீங்கதான் செய்யனும்“
”சரி சரி நான் சந்தேகப்படலை ஆச்சர்யப்பட்டு கேட்டேன் அவ்ளோதான்”
”சரி கும்பிடலாமா”
“ஓ”
”போட்டோ எங்க“
”இருக்கு இருக்கு” என சொல்லியவன் தனது செல்போனில் இருந்து பவானியின் போட்டோவை வைத்து அதை அப்படியே அவளிடம் காட்ட அவளோ அதிர்ந்தாள்
”என்னது இது”
”வீட்டுக்கு போனேன் எங்க தேடியும் போட்டோ கிடைக்கலை, அதான் இதை வைச்சி கூட நாம கும்பிடலாம் பவானி தப்பா நினைக்க மாட்டா” என சொல்ல அவளோ அதிர்ந்தாள்
”அடப்பாவி” என நினைக்க அவனோ செல்போனை ஓரிடமாக சாய்ந்தபடி வைத்தான், அதன் முன் ஹரிணி செய்து வைத்த உணவுகளை ஒரு தட்டில் வைத்தான். கற்பூர ஆரத்தி எடுத்தான் கைகூப்பி வணங்கியபடியே 2 சொட்டு கண்ணீர் விட்டான். அதன்பின் சாப்பாட்டில் சிறிது எடுத்துக் கொண்டு ஹரிணியிடம்
”காக்காவுக்கு வைச்சிட்டு வரேன்” என சொல்லி மொட்டை மாடிக்குச் செல்ல அவளோ கடுப்பானாள்
”பவானி நீ சொன்னது சரிதான் இவன் சரியான கிரிமினல் பாரு என்னம்மா நடிக்கறான் இப்ப என் நடிப்பை பாரு” என நினைத்தபடியே அந்த செல்போனை எடுத்து உள்ளே என்னென்ன உள்ளது என பார்க்கலானாள்.