(Reading time: 20 - 39 minutes)
Vidukathaiyaay intha vazhkkai
Vidukathaiyaay intha vazhkkai

காக்காவிற்கு சாதம் வைத்துவிட்டு வந்த தருணோ ஹரிணி தனது செல்போனை நோண்டுவதைக் கண்டு அதிர்ந்து அவளிடம் வந்தான் பதட்டமாக

   

”ஹரிணி என்ன செய்ற நீ, அது என்னோடது கொடு” என அலற அவளோ

   

”ஷ்” என அதட்டினாள்

   

”இல்லை அதுல எதுவும் இருக்காது அதைக் கொடு” என அவளிடம் பறிக்க வர அவளோ அவனை பார்த்து முறைத்தாள்

   

”நான் உன்னோட ஒய்ப், உன் செல்போன் தொடக்கூட எனக்கு உரிமையில்லையா“

   

”அடுத்தவங்க டைரியை படிக்கறது எப்படி நாகரிகம் இல்லையோ அதே போல அடுத்தவங்களோட செல்போனை பார்க்கறதும் நாகரிகமில்லாத செயல் ஹரிணி“

   

”ஓ அப்படியா” என சொல்லிக் கொண்டே போனை அவனிடம் தந்தாள்

   

”எனக்கு நாகரிகம் இருக்கு ஆனா, உங்களுக்குதான் அது இல்லைன்னு உங்க செல்போனே காட்டிக் கொடுத்துடுச்சி”

   

”ஏன் அப்படி சொல்ற”

   

”போனா அது, உள்ள இருக்கற விசயங்களை பார்க்க பார்க்க அப்படி எரிச்சலா இருக்கு, கண்டதெல்லாம் டவுன்லோடு செய்து வைச்சிருக்கீங்க இதுதான் உங்க லட்சணமா வீட்ல சும்மாயிருக்க முடியலைன்னா வேற ஏதாவது வேலைக்கு போகலாம்ல அதை விட்டுட்டு எப்ப பாரு கண்ட கண்ட வீடியோக்களை பார்த்துக்கிட்டு இருக்கறதுதான் உங்க வேலையா”

   

”இல்லை சீ சீ இது வந்து எப்பவோ இறக்கினது”

   

”அதை ஏன் இன்னும் பத்திரமா வைச்சிருக்கீங்க”

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.