(Reading time: 20 - 39 minutes)
Vidukathaiyaay intha vazhkkai
Vidukathaiyaay intha vazhkkai

”பவானி மறுபடியும் நீ என் வாழ்க்கையை காப்பாத்திட்ட, ரொம்ப நன்றி பவானி, நீ மட்டும் தருணை பத்தின முக்கியமான விசயத்தை டைரியில சொல்லாம விட்டிருந்தா இந்நேரம் என் நிலைமை மோசமாகியிருக்கும், தனக்கு ஆண்மையில்லைன்னு தெரிஞ்சும் எப்படி வீர வசனம் பேசிட்டு போறான்னு பாரு 

   

பாவம் பவானி அவளுக்கு உண்மை தெரியாம அவனை உயிருக்குயிரா காதலிச்சா ஆனா, தருண் தன்னோட இயலாமையை யாருக்கும் தெரியக்கூடாது, முக்கியமா பவானி கண்டுபிடிச்சிடக் கூடாதுன்னு அவளை தள்ளி வைச்சான், அவளை டார்ச்சர் பண்ணான், ஆனாலும் எப்படியோ அவள் கண்டுபிடிச்சிட்டா, அதுக்கு நிவேதினியோட மரணம்தான் காரணம் நிவேதினி இறந்தபின்னாடி அதுல சந்தேகம் ஏற்பட்டு அவளோட குடும்பத்தார்கள் தருணை அடிச்ச அடியில அவனோட ஆண்மையை இழந்துட்டான். 

   

அது தெரிஞ்சிருந்தும் பவானியை கல்யாணம் செய்துக்கிட்டு, அவளுக்கு மிகப்பெரிய துரோகத்தை இழைச்சிட்டான் படுபாவி, இவனையெல்லாம் சும்மா விடக்கூடாது, இந்த விசயத்தை வைச்சே அவனை நான் கஷ்டப்படுத்தறேன், என்னவோ பெரிய சாதனையை செய்துட்ட திருப்தியில போறல்ல, இன்னிக்கு நைட் உன்னை கூப்பிடறேன், அப்ப நீ என்ன செய்றன்னு பார்க்கிறேன், ஒரு நாள் தப்பிக்கிலாம் இரண்டு நாள் தப்பிக்கலாம், எல்லா நாளும் தப்பிக்க முடியாது, ஒருநாள் நீயே உன் வாயால உண்மையை சொல்லுவ இல்லைன்னா நானே அந்த உண்மையை கண்டுபிடிச்சி உன்னை ஒருவழியாக்கறேன் 

   

இதுதான் உனக்கான கடைசி தண்டனை, நீ ஆண்மையில்லாதவன்னு உலகத்துக்கு முன்னாடி நிரூபிச்சி உன்னை அசிங்கப்படுத்தி, அவமானப்படுத்தி, வாழவே லாயக்கில்லைன்னு சாகலாம்னு நீயே துணிந்து முடிவு எடுத்து சாகற வரைக்கும் நான் ஓயமாட்டேன் இது சத்தியம்” என தனக்குள் சத்தியம் செய்துக் கொண்டாள் ஹரிணி.

  

Like & Follow our Facebook Page to be notified of the new episodes immediately.

    

தொடரும்.

Go to Vidukathaiyaay intha vazhkkai story main page

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.