”பவானிக்கு கூட நான் இது போல காபி போட்டு தந்ததில்லை“
”அதுக்கு”
”நீ எனக்கு ரொம்ப முக்கியம்னு சொல்ல வரேன்“
”ஏதோ ஒரு விசயத்துக்கு அடிபோடற மாதிரி தெரியுது, அது என்ன விசயம் சொல்லுங்க”
”வெளிய போகலாமா”
”வெளியன்னா”
”சும்மா ஜாலியா எங்கயாவது போலாம், டின்னர் கூட வெளிய சாப்பிடலாம் நமக்குள்ள இருக்கற வெறுப்பு மறைஞ்சி ஒரு புரிதல் கொண்டு வரலாம் பேசினா எல்லாமே சரியாயிடும்னு நான் நம்பறேன்“
”எனக்கும் வீட்ல இருக்கறது ரொம்ப கஷ்டமாயிருக்கு ஒரு சேன்ஜ் வேணும்னு தோணுது”
”அப்படின்னா ரெடியாகு“
”எங்க போறோம்“
”நீ ரெடியாகி வா நான் உன்னை கூட்டிட்டுப் போறேன் அந்த இடம் உனக்கு ரொம்ப பிடிக்கும்” என சொல்ல அவளும் யோசனையுடன் ரெடியாகச் சென்றாள்
சிறிது நேரம் கழித்து இருவரும் ரெடியாகி வந்தார்கள், ஹரிணியின் காரை தருணே ஓட்டினான் அவளோ முன் சீட்டில் அமராமல் பின் சீட்டில் அமர்ந்தாள். தருணும் அவளை அடிக்கடி கண்ணாடி வழியாக பார்த்தான் ஹரிணி மிகவும் பதட்டமாக இருந்தாள், அவளின் பதட்டத்தின் காரணம் தெரியாமல் குழம்பியடியே ஒரு பப்புக்கு அழைத்துச் சென்றான். இது போன்ற இடத்துக்கு ஹரிணி என்றுமே வந்ததில்லை.