”என்ன இதுல இளங்கோ போட்டோவே இல்லையே”
”ஏன் இருக்கனும் எனக்கு கல்யாணம் ஆயிடுச்சி இப்பவும், நான் என் செல்போன்ல இளங்கோவை வைச்சிருந்தா அது உனக்கு நான் செய்ற துரோகமாயிடும்“
”அப்புறம் எதுக்காக வீட்ல போட்டோ வைச்சிருக்க”
”இது அவனுக்கும் சொந்தமான வீடு, அவனோட பொருட்கள் இங்க இருக்க உரிமையிருக்கு”
”எனக்கு இதெல்லாம் இருக்கறது சுத்தமா பிடிக்கலை“
”எனக்கு நீ இங்க இருக்கறதுகூட சுத்தமா பிடிக்கலை”
”ஹரிணி”
”நிறுத்து என் பேச்சை நம்பாம சந்தேகப்பட்டு என் போனை நோண்டிப் பார்க்கறல்ல, இதுதான் நீ என் மேல வைச்சிருக்கற நம்பிக்கையா”
”அப்படியில்லை நீ என் போனை பார்த்த நான் உன் போனை பார்த்தேன் இரண்டுக்கும் சரியா போச்சி”
”எப்படி சரியா போச்சிங்கற நான் ஒண்ணும் உன் மேல சந்தேகப்பட்டு உன் போனை பார்க்கலையே“
”சாரி ஹரிணி போதுமா ஏதோ நினைப்புல என்னவோ செய்துட்டேன்“
”நல்லா சமாளிக்கறீங்க தருண்”
”ப்ளீஸ் ஹரிணி இதோட இந்த பிரச்சனையை விட்டுடு போதும்”