(Reading time: 20 - 39 minutes)
Vidukathaiyaay intha vazhkkai
Vidukathaiyaay intha vazhkkai

விசயம் தெரிஞ்சா அவள் நம்மளை சும்மா விடுவாளா எல்லா பொண்ணுங்களுக்கும் கற்புதான் முக்கியம் ஏற்கனவே இளங்கோவோட இருந்தவதானே கற்புக்கரசின்னு இவளை சொல்லிட முடியாது ஆனாலும் நான் அவளுக்கு கணவன்னு புரிய வைச்சே ஆகனும் இன்னிக்கே அதுக்கான வேலைகளை ஆரம்பிக்கிறேன்” என வில்லங்கமாகச் சிந்தித்தான்.

   

மறுபக்கம் ஹரிணியோ தன் அறையில் தருணை நினைத்து பயந்திருந்தாள்

   

”தருண் நாம நினைக்கற மாதிரி சாதாரண ஆள் கிடையாது, மோசமான கிரிமினல் இல்லைல்ல சைக்கோ அவனை பழி வாங்கனும், அவனுக்குள்ள குற்ற உணர்ச்சி வரனும்னு நாம செய்ததெல்லாம் தப்பாயிடுச்சே, இவனை நாம கல்யாணம் செய்துக்கிட்டது தப்போ, நம்மளையே அடிக்க வரானே, இவனை விட்டா எதுவேணும்னாலும் செய்வான் இவன்கிட்ட ரொம்ப ஜாக்கிரதையா இருக்கனும் அதுதான் நமக்கு நல்லது” என நினைத்து சற்று கலவரத்துடனே இருந்தாள்.

   

அன்று மாலை நேரம் ஹரிணிக்காக காபி போட்டு கொண்டு போய் அவளிடம் தர அவளோ சந்தேகத்துடன் அந்த காபியை வாங்காமல் இருந்தாள்

   

”எதுக்கு சந்தேகப்படற அது வெறும் காபிதான் குடி”

   

”என்ன திடீர்ன்னு என் மேல அக்கறை”

   

”நான் உன் கணவன் உன்மேல எனக்கு அக்கறையில்லாம இருக்குமா”

   

“ஓ அப்படியா பொல்லாத அக்கறை” என சொல்லிக் கொண்டே அவன் தந்த காபியை வாங்கி பருகினாள்.

   

”காபி எப்படியிருக்கு”

   

”நல்லாயிருக்கு”

   

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.