(Reading time: 20 - 39 minutes)
Vidukathaiyaay intha vazhkkai
Vidukathaiyaay intha vazhkkai

”முடியாது” என அவன் வெறியுடன் கத்திவிட்டு அவளிடம் எல்லை மீற பதிலுக்கு அவனை தள்ளிவிட முயன்றாள் முடியவில்லை. அப்படி இப்படி என அவளை அழைத்துக் கொண்டு படுக்கையில் தள்ளி அவளை பலாத்காரம் செய்ய முயன்றான். அவளோ காட்டுகூச்சல் போட்டாள், அவனை தள்ளிவிட்டாள் அவனோ அவனின் பலத்தை முழுவதுமாக அவளிடம் காட்டினான். அவளுக்கு என்ன செய்வதென தெரியவில்லை, பதட்டமானாள் ஏதாவது வழி கிடைக்குமா என யோசித்துப் பார்க்கையில் பவானியின் நினைவே வந்தது அவளின் டைரியில் எழுதப்பட்டிருந்த முக்கியமான ஒரு விசயம் அந்நேரம் அவளுக்கு நினைவில் வரவும் சட்டென அசதியில் மயங்கிப் போவது போல பாவ்லா செய்தாள். அவள் மயங்கிவிட்டாள் என தெரிந்ததும் அவளை விட்டு விலகினான்  தருண்.

   

அவளையே ஏற இறங்கப் பார்த்தான் 

   

”உன் அழகை என்னால அனுபவிக்க முடியலை, என்ன செய்றது எல்லாம் என் விதி” என புலம்பிக் கொண்டே அவளின் பக்கம் படுத்து உறங்கலானான். ஒரு மணி நேரம் கழித்து மெல்ல கண் விழித்தாள் ஹரிணி, அவன் உறங்குவதைக் கண்டு நிம்மதியாகி தானும் உறங்கினாள்

   

மறுநாள் காலையில் அவளை எழுப்பினான் தருண், அவளோ கண்கள் திறந்து சுற்றி முற்றி பார்த்துவிட்டு பதட்டமாகி அவனை பார்க்க அவனோ மென்மையாக சிரித்தபடியே

   

”பார்த்து எதுக்கு டென்ஷன் ஆகற ரிலாக்ஸ்” என சொல்ல அவளோ தன்னை ஆராய்ந்தாள். தனது துணி விலகியிருப்பதைக் கண்டு அதிர்ந்து அதை சரியாக்கினாள்

   

”ஹரிணி உன்னை நான் ரொம்ப விரும்பறேன், உன்னை சொந்தமாக்கிக்க எனக்கு வேற வழி தெரியலை, எங்க உனக்கும் எனக்கும் சண்டையாகி அதனால நாம பிரிஞ்சிடுவோம்னு பயந்துதான் நேத்து உன்கிட்ட அத்துமீறி நடந்துக்கிட்டேன், மத்தபடி என்னை வெறுத்துடாத என்னிக்குமே நான் உனக்கு கெடுதல் செய்ய மாட்டேன் ப்ளீஸ்”

   

”இதுக்கு என்ன அர்த்தம்” என்றாள் குழப்பமாக

   

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.