(Reading time: 20 - 39 minutes)
Vidukathaiyaay intha vazhkkai
Vidukathaiyaay intha vazhkkai

   

”இங்கயா இங்க எதுக்கு“

   

”வா என்ஜாய் பண்ணலாம்“

   

”இல்லை எனக்கு இது பிடிக்கலை, நாம வேற இடத்துக்குப் போகலாம்”

   

”கமான் ஹரிணி லைப்ல கொஞ்சம் கிக் இருக்கனும், இங்க வந்து பாரு சொர்க்கமே இருக்கும்”

   

”வேணாம் எனக்கு பயமாயிருக்கு“

   

”நான் இருக்கறப்ப உனக்கென்ன பயம் வா வா” என அவளை வம்படியாக பிடித்து இழுத்துக் கொண்டு சென்றான். அவளும் வேறு வழியின்றி சென்றாள்.

   

பப்புக்குள் இருந்த நிலவரம் அவளுக்கு கலவரமாக தெரிந்தது, கும்மிருட்டில் ஆங்காங்கு விளக்குகள் எரிந்தபடி இருந்தது, சிலர் ஆடிக்கொண்டு இருந்தார்கள், சிலர் குடித்தபடி இருந்தார்கள் தருணோ அவளை அழைத்துக் கொண்டு சென்றான்

   

”வேணாம் தருண் எனக்கு ஒரு மாதிரியா இருக்கு நான் வரலை“

   

”கமான் ஹரிணி என்ஜாய் பண்ணு” என அவளை இழுத்து ஆட வைக்கிறேன் என ஒருவழியாக்கினேன், அதில் அவளுக்கு தாகம் எடுக்க சட்டென ஒரு மதுவை அவளுக்கு தர அவளோ மறுக்க அதைக் கேளாமல் அவளுக்கு திணிக்க அதில் அவளுக்கு கோபமே எழுந்தது, முழுவதுமாக குடிக்க வைக்க அவன் முயற்சி செய்தும் அவள் குடிக்காமல் வாந்தி எடுத்தாள், அதில் அவனுக்கு அவமானமாகி அவளை அழைத்துக் கொண்டு வீடு திரும்பினான்

   

”சே என் மானத்தையே வாங்கிட்டியே”

   

”எனக்கு பிடிக்காததை செய்யாதீங்க தருண்” என்றாள் கோபமாக

   

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.