”என்னை வைச்சி வீடியோ எடுத்திருக்கீங்களே” என பொங்கினாள்
”அது ஞாபகார்த்தமா இருக்கட்டும்னுதான்“
”சே நீயெல்லாம் எந்த ரகம்னே எனக்கு சொல்லத் தெரியலை” என கோபத்தில் அந்த போனை தரையில் தூக்கி போட்டு உடைத்தாள், அதில் அவனுக்கு பொல்லாத கோபம் வந்தது அந்த கோபத்தில் ஹரிணியை அடிக்க வர அதற்குள் உஷாரான ஹரிணி சட்டென அவனின் கன்னத்தில் விட்டாள் ஒரு அறை அதில் அவன் சற்று அதிர்ந்து அவளை முறைக்க
”நீ செய்த இந்த கேவலமான வேலைக்கு உன்னை அடிச்சிருக்க கூடாது, கொன்னிருக்கனும்” என சொல்ல அவன் அதிர்ந்து அவளிடம் மன்னிப்பு கேட்டான்
”உன்னை நம்பி நான் கல்யாணம் செய்துக்கிட்டேன், நீ இளங்கோவை போல இருப்பேன்னு நினைச்சேன் ஆனா, நீ பொறுக்கியாட்டம் இருக்கியே பொம்பளை பொறுக்கி”
”அப்படி சொல்லாத ஒரு கணவனா எனக்கு உரிமையிருந்தது அதனால வீடியோ எடுத்தேன், அதை அப்பப்ப பார்த்து சந்தோஷப்பட்டுக்கிட்டேன் இதுல என்ன தப்பிருக்கு”
”சீய்“
”ஆமா நீ என்ன ரொம்ப நல்லவளாட்டும் பேசற, உன் போன்ல மட்டும் இது போல ஆயிரம் வீடியோக்கள் இருக்கும் எனக்குத் தெரியாதா என்ன“
”நீதான் பார்த்தியா போ போய் என் போனை பாரு, நானும் சரி இளங்கோவும் சரி கண்ணியமானவங்க, உன்னைப் போல இல்லை” என சொல்ல அவன் நம்பவில்லை
ஹரிணியின் போனை எடுத்து அலசி ஆராய்ந்தான் அதில் இளங்கோவின் போட்டோ அவன் சம்பந்தப்பட்ட எந்த தகவலும் இல்லை மாறாக தருணின் போட்டோக்கள்தான் இருந்தது