”ஒரு முறை அவளுக்கு இதைக் காட்டினேன்“
”எதுக்கு காட்டினீங்க”
”பாரு நான் எந்தளவுக்கு ரொமான்டிக் பர்சன்னு காட்டினேன்“
”சே” என்றாள் எரிச்சலாக
”அதை கொடு ஹரிணி தேவையில்லாம நமக்குள்ள சண்டை வருது”
”வெயிட் இன்னும் என்னென்ன வைச்சிருக்கீங்கன்னு பார்க்கிறேன்” என சொல்ல அவனோ பதறினான்
”இல்லை வேணாம் அதைக் கொடு” என காட்டுக்கத்தல் கத்த அவளோ
”இந்த கத்தற வேலையெல்லாம் என்கிட்ட வேணாம்” என சொல்லிவிட்டு மேற்கொண்டு என்னென்ன வீடியோக்கள் இருக்கிறது என பார்க்கலானாள். அதில் பவானியை அவன் ஒரு முறை அறைந்த வீடியோ இருக்கவும்
”எதுக்காக பவானியை அடிச்சீங்க”
”அவள் ஏதாவது தப்பு செய்திருப்பா, அதான் அடிச்சேன்“
“அதை கூடவா நீங்க வீடியோ எடுத்து வைக்கனும்”
”சே சே நானா எடுக்கலை கைதவறி வீடியோ ஆன் ஆகியிருக்கும்” என சொல்ல அவளோ அடுத்தடுத்த வீடியோக்களைப் பார்த்தாள், அதில் அவள் சம்பந்தப்பட்ட வீடியோ இருந்தது, அவளுக்கே தெரியாமல் அவள் உறங்கும் போதும், உடை மாற்றும் போதும் ஹரிணிக்கே தெரியாமல் கடைசியாக அவளுடன் முதலிரவு கொண்டாட முயற்சி செய்த போதும் என பல வீடியோக்கள் இருக்கவே அதிர்ந்தாள்