”சாரி ஹரிணி நான் கவனிக்கலை, இதோ இப்பவே டெலிட் பண்ணிடறேன் பாரு” என சொல்லி அவனே தன் செல்போனில் இருந்த வீடியோக்களை டெலிட் செய்ய செய்ய அவளும் கவனமாக பார்த்தபடியே வந்தவள், ஒரு போல்டரில் நிவேதினி என இருக்கவும் சட்டென அந்த போனை பிடுங்கினாள்
”ஏய் என்ன செய்ற“
”ஆமா என்ன இது நிவேதினின்னு இருக்கு ஆமா அதுக்குள்ள என்ன இருக்கு”
”ஆஆஆ இல்லை உள்ள ஒண்ணும் இல்லை நிவேதினி நினைப்பா அவளோட போட்டோக்கள் இருக்கும்”
”ஓ அப்படியா நான் நிவேதினியை பார்த்தது இல்லை, இருங்க அவங்க போட்டோவை பார்க்கிறேன்“
”இல்லை வேணாம் அதைக் கொடு”
”முடியாது” என சொல்லி அந்த போல்டரை திறந்தாள்
நிவேதினியின் போட்டோக்கள் வரிசையாக இருந்தது, அதை எல்லாம் திறந்து பார்த்தாள். கொள்ளை அழகுடன் காட்சி தந்த நிவேதினியை கணடு ஒரு நொடி ஹரிணிக்கே பொறாமை எழுந்தது
”அடடா எவ்ளோ அழகா இருக்காங்க”
”உன்னை விட இல்லை ஹரிணி“
”இல்லை இல்லை எனக்கே பொறாமையா இருக்கு, இவ்ளோ அழகான பொண்ணு உங்களை காதலிச்சிருக்கா, உங்க காதல் வாழ்க்கை ரம்யமா இருந்திருக்கனுமே”