(Reading time: 20 - 39 minutes)
Vidukathaiyaay intha vazhkkai
Vidukathaiyaay intha vazhkkai

”ஓ ஆமாம்ல அது வீட்லதான் இருக்கு, நான் போய் கொண்டு வரேன்”

   

”சரி நான் சமையல் வேலைகளை செய்றேன், நீங்க வர்றதுக்குள்ள எல்லாம் ரெடியா இருக்கும்” என சொல்ல அவனும் உற்சாகமாக கிளம்பிச் சென்றான் அவன் சென்றதும்

   

”அடடே என்ன ஒரு பாசம், என்ன ஒரு அன்பு, இவனாலதானே பவானி தற்கொலை செய்துக்கிட்டா, அந்த குற்ற உணர்ச்சி கூட இல்லாம எவ்ளோ நல்லவனா நடிக்கறான் பாரு, டேய் உன்னைப் பத்திதான் எனக்கு நல்லாவே தெரியுமே, ஏற்கனவே பவானி டைரியில எழுதியிருந்தா, நிவேதினியோட நினைவு நாள் வந்தப்ப நீ எப்படியெல்லாம் பவானியை டார்ச்சர் பண்ண, அதனால அவள் எவ்ளோ மனசு உடைஞ்சிப் போயிட்டாள்ன்னு எனக்கு நல்லாவே தெரியும், அதையே எனக்கு செய்யலாம்னு நினைப்பா, இன்னிக்கு உன் மனசு உடையற அளவுக்கு செய்றேன் பாரு, அப்பவாச்சும் உனக்கு பவானியோட இறப்புக்கு நீயும் ஒரு காரணம்னு புரிஞ்சிக்குவ” என நினைத்தவள் ஆபிசுக்கு விடுமுறை சொல்லிவிட்டு கடகடவென சமையல் வேலையில் இறங்கினாள்.

   

தன் வீட்டிற்குச் சென்ற தருணோ பவானியின் நினைவு நாள் பற்றி சொல்ல அவனது பெற்றோரோ

   

”இது ரொம்ப முக்கியமா”

   

”நான் நல்லவன்னு ஹரிணி நம்பனும், பாரு கல்யாணம் ஆனாலும் பவானியை மறக்காம இருக்கான், அவனுக்கு அன்பு அதிகம்னு அவள் நினைக்கனும்”

   

”எதுக்கு இப்படியெல்லாம் பேசற என்னாச்சி உங்களுக்குள்ள சண்டையா”

   

”ஆமாம் சின்ன சண்டை அதை சரியாக்கதான் இந்த செட்டப் எல்லாம் ஆமா பவானியோட போட்டோ எங்க இருக்கு“

   

”அது எங்க இங்க இருக்கு, அது எப்பவோ குப்பைத்தொட்டிக்கு போயாச்சி“

   

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.