(Reading time: 38 - 76 minutes)
Nenjukkulle innaarunnu
Nenjukkulle innaarunnu

மற்றும் கீர்த்தனாவுக்கும் துணிமணி, இனிப்பு, பழங்கள் என வைத்து சீர் தட்டை தர அதை வாங்கச் சொல்லி தேவா கீர்த்தனாவிடம் கூறவே அவளும் வாங்கிக் கொண்டாள். உடனே தாஸ் அதை வாங்கி காருக்குள் வைத்துவிட்டு வந்தான்.
   
”சந்தோஷமா இருக்கு தம்பி” என சொல்ல அவனும் 
   
”எனக்கும் சந்தோஷம்தான்” என சொல்ல அவர் உடனே பணம் கொண்டு வந்து கொடுத்தார்
   
”முன்னாடி அட்வான்ஸ் போக இந்தாங்க பத்து லட்சம்” என தர அதை தேவா வாங்காமல்
   
”இவள்ட்ட கொடுங்க இனிமே இவள்தானே எனக்கு எல்லாம்” என சொல்ல அவரும் சிரித்தபடியே கீர்த்தனாவிடம் கொடுக்க தயங்கியபடியே அதை வாங்கினாள். 
   
பின் 15 நிமிடம் கதைகளை பேசிவிட்டு மூவரும் வெளியே வந்தார்கள். அவனிடம் வேலை செய்த வேலையாட்களும் தேவாவிடம் வர
   
”நான் சொல்ற இடத்துக்கு போங்க, 2 நாள் வேலையிருக்கு அதுக்கப்புறம் 1 வாரம் லீவு எடுத்துக்குங்க” என சொல்லி ஹாஸ்டல் அட்ரஸை தர அவர்களும் சரியென செல்ல முயல தாஸிடம்
   
”தாஸ் வேலையாட்களுக்கு சம்பளம் தரனும், நீ அவங்களோடவே ஹாஸ்டல் கட்டற இடத்துக்குப் போ, நான் பணத்தோட வந்துடறேன் அப்புறம் சம்பள நோட் எடுத்துக்க, நான் வந்துடறேன்” என சொல்ல அவனோ கீர்த்தனாவை பார்க்க
   
”நான் அவளை கோயில்ல விட்டுட்டு பணத்தோட வரேன் நீ போ” என சொல்ல அவனும் நம்பிக்கையாக வேலையாட்களுடன் லாரியில் ஏறிச் சென்றுவிட்டான். அவன் சென்றதும் தேவா கீர்த்தனாவை முன்சீட்டில் அமர வைத்தான். அவள் தன்னிடம் இருந்த பணத்தை 
   
”இந்தாங்க” என அவள் நீட்ட அவனோ அதை வாங்கி பின்சீட்டில் இருந்த சீர்தட்டில் வைத்துவிட்டு அவளையே பார்த்தான் வில்லங்கமாக, அடுத்து காரை ஓட்டிக்கொண்டு எங்கோ சென்றான்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.