(Reading time: 38 - 76 minutes)
Nenjukkulle innaarunnu
Nenjukkulle innaarunnu


தேவா தாஸிடம்
   
”இந்நேரம் சரண்யா வீட்லதான் இருப்பா, வா நாம கீர்த்தனாவை இப்பவே கூட்டிட்டுப் போய் தாத்தா பாட்டிகிட்ட பேசலாம் வா” என சொல்லி கீர்த்தனாவை அழைத்துக் கொண்டு தன் வீட்டிற்குச் சென்றான் தேவா.
   
அந்நேரம் சரண்யா கிளம்பி தயாராக பாட்டியின் முன் நின்றாள்
   
”இரும்மா தேவா வரட்டும், அவன் உன்னை கூட்டிட்டு போவான்” என சொல்ல
   
”நானும் அவருக்காகதான் காத்திருக்கேன்” என சொன்னாள் சரண்யா அந்நேரம் அனைவரும் அந்த வீட்டில் இருந்தார்கள். 
   
இன்னும் யாரும் வேலைக்கு செல்லவில்லை 10 மணிக்குத்தான் அனைவரும் செல்வார்கள். அந்த நேரத்தில் தேவா கீர்த்தனாவை அழைத்துக் கொண்டு தாஸ் உடன் வீட்டுக்குள் வந்தான். வந்தவன் அங்கிருந்த தாத்தாவிடம் கீர்த்தனாவை காட்டி
   
”எப்படி” என்றான்
   
”நான்தான் அன்னிக்கே பார்த்துட்டேனே எனக்கேன் காட்டற எல்லாருக்கும் காட்டு”
   
“காட்டறேன் நீங்க முதல்ல ஆசிர்வாதம் செய்ங்க” என சொல்லி கீர்த்தனாவை அழைக்க அவரும் தன் மனைவி பக்கம் சென்று நின்றுக் கொண்டார். 
   
ஜோடியாக காலில் விழுந்த தேவா மற்றும் கீர்த்தனாவைக் கண்டு திகைத்த பாட்டி சரண்யாவை பார்க்க அவள் கண்கள் கலங்கி அழுதுக் கொண்டிருக்கவும் கோபமே வந்தது பாட்டிக்கு சட்டென ஆசிர்வாதம் செய்யாமல் தேவாவை எழுப்பி அவன் கன்னத்தில் பளார் என ஒரு அறைவிட்டார்
   
”கோசலை என்ன செய்ற” என தாத்தா அலற மொத்த குடும்பமும் ஹாலில் ஆஜரானது.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.