(Reading time: 38 - 76 minutes)
Nenjukkulle innaarunnu
Nenjukkulle innaarunnu


   
”அவருக்கு 20,000 கொடு” என சொல்ல தாஸ் வியந்தான். அங்கிருந்தவர்களும் வியந்தார்கள் மேஸ்திரியோ தேவாவிடம்
   
”என்ன தம்பி யார் இவங்க”
   
“நான் கல்யாணம் பண்ணிக்கப் போற பொண்ணு, உங்க முதலாளியம்மா அவங்க கையால பணம் வாங்க கஷ்டமா உங்களுக்கு” என கேட்க அனைவரும் மகிழ்ந்தார்கள். ஆண்களும் பெண்களும் லைனை விட்டுவிட்டு அவளை சூழ்ந்துக் கொண்டு அவளது அழகை புகழ்பாடிவிட்டு தேவாவிடம்
   
”ரொம்ப அழகாயிருக்காங்க முதலாளியம்மா” என சொல்ல தேவா சிரித்தான். அனைவரும் தேவாவிற்கு வாழ்த்து சொல்லவே அவனுக்கு கூச்சமாகிப் போனது. தாஸோ தேவாவிடம்
   
”நீயா ஏன் இப்படி செய்ற, இன்னும் வீட்ல இவளைப்பத்தி சொல்லலையே, பெரிய பிரச்சனையாகப் போகுது” என அவன் சைகை செய்ய அதற்கு தேவாவோ
   
”அதுக்காக அந்த சரண்யாவை என்னால கல்யாணம் பண்ணிக்க முடியாது. சரண்யாவை பத்தின ரகசியம் என்கிட்ட ஒண்ணு இருக்கு, அதை ஆதாரத்தோட நான் நிரூபிக்கிறேன்”
   
“என்ன ரகசியம்?” என அவன் கேட்க
   
”பொறுமையா இரு 2 நாள்ல உனக்கு நான் சொல்றேன். சரியா” என சொல்லிவிட்டு நோட் புக் பார்த்து வரிசையாக ஆளின் பெயரையும், எவ்வளவு பணம் என்றும் சொல்ல கீர்த்தனா எண்ணி எண்ணிக் கொடுத்து கைகூப்பினாள். 
   
அவளது அடக்கம், எளிமை, அழகு அனைத்தும் வேலை செய்பவர்களுக்குப் பிடித்துப் போகவே சந்தோஷமாக பணத்தை வாங்கிக் கொண்டு காலியான இடத்தை சுத்தம் செய்ய ஆரம்பித்தார்கள்.
   

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.