(Reading time: 38 - 76 minutes)
Nenjukkulle innaarunnu
Nenjukkulle innaarunnu


   
“எதுக்கு இப்படி என்னை கட்டாயப்படுத்தற”
   
“எனக்கு இந்த வீடு பிடிச்சிருக்கு, என் வீட்ல நான் தாத்தாவோட இருந்து தனியா வாழ்ந்துட்டேன். இந்த வீட்ல இருக்கறவங்களை எனக்கு பிடிச்சிருக்கு, என்கிட்ட பாசமா நடந்துக்கறாங்க அதனால எனக்கு நீ தேவை”
   
“ஒ அப்படியா கதை சரி என் தம்பி இருக்கான் சூர்யா, அவனை நீ கல்யாணம் பண்ணிக்க இங்கயே இரு”
   
“முடியாது நான் மனசார காதலிச்சது உங்களைத்தான், உங்களை பார்த்தபின்னாடிதான் எனக்கு காதல் வந்துச்சி”
   
“ஆனா எனக்கு வரலை”
   
“வரும் கண்டிப்பா வரும் வரவைப்பேன்” என சொல்லியவள் பாட்டியிடம்
   
”நீங்க என்கிட்ட காட்டின அன்பு எல்லாமே பொய்யா” என கேட்க அவரோ
   
”பொய் இல்லைம்மா நான் உண்மையாதான் உன்மேல அன்பு காட்டினேன் ஆனா, நீ என்கிட்ட உண்மையை மறைச்சிட்ட”
   
“காதலுக்காக சில விசயங்களை மறைக்கறது தப்பில்லையே”
   
“இங்க என் பேரனுக்குதான் நான் முக்கியத்துவம் தருவேன், அவன் ஆசைக்காகத்தான் நான் எல்லாம் செய்வேன், நான் தப்பா புரிஞ்சிக்கிட்டேன் ஆனா இப்பதானே தெரியுது என் பேரன் ஆசைப்படறது உன்னையில்லை இவளைன்னு”
   
“சரி எனக்கு புரியுது ஆனா எனக்கு தேவா வேணுமே”
   

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.