“அதுவா அது என் வீட்ல இருந்த 3 நாள்ல அவள் என் பையனை விரும்பியிருக்கா”
“அப்படியா நல்ல விசயம்தானே” என சந்தோஷப்படவே
”இல்லை ஆனா என் பையன் வேற ஒரு பொண்ணை விரும்பறான்” என சொல்ல அந்தப் பக்கம் பலத்த மௌனம்
”ஹலோ பூபதி இருக்கியா”
“இருக்கேன் புரியுது புரியுது இப்ப என் பொண்ணோட நிலைமை என்ன”
“அழுதுக்கிட்டு இருக்கா எனக்கு இப்ப என்ன செய்றதுன்னு தெரியலைப்பா”
“சரி நான் பார்த்துக்கிறேன் உடனே அவளை அனுப்பு”
“நான் சொன்னா அவள் கேட்கலையே நீயே சொல்லு” என சொல்லிவிட்டுப் போனை சரண்யாவிடம் தர அவள் அதை வாங்கி
”டாட்” என்றாள்
”சரண்யா போதும் அங்க இருந்தது கிளம்பி வாம்மா”
”எனக்கு தேவா வேணும் டாட்”
“தேவா யாரு”
“உங்க ப்ரெண்ட்டோட பையன்”
“சரி சரி அதெல்லாம் வீட்ல வந்து பேசிக்கலாம் நீ கிளம்பி வா”
தொடர்கதை - நெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு - 06 - சசிரேகா
- Details
- Written by: Sasirekha
- Category: Tamil Thodar Kathai
(Reading time:
38 - 76 minutes)
Page 13 of 36