கொண்ட தாஸும் அவளை அழைத்துக் கொண்டு விக்ரம் வீட்டிற்குச் சென்றான்.
தேவாவோ விக்ரமை நினைத்து குழம்பியவன் தன் பிரச்சனையை தாத்தாவிடம் சொல்ல அவரை தனியாக அழைத்துக் கொண்டு அவரது அறைக்குச் சென்றான்
”என்னடா ஆச்சி எதுக்காக இங்க கூட்டிட்டு வர்ற”
“தாத்தா ஒரு சின்ன பிரச்சனை”
“என்ன பிரச்சனை” என கேட்க அவன் விக்ரம் கீர்த்தனாவை விரும்புவது, அவனது தங்கை தேவாவை ஆசைப்படுவது என சொல்லி முடிக்கவே தாத்தாவிற்கு குழப்பமே வந்தது
”கீர்த்தனா தெளிவா இருக்கால்ல அவள் நிஜமாவே உன்னை லவ் பண்றாளா இல்லையா”
“லவ் பண்றா தாத்தா இல்லாமயா அவளை நான் இங்க கூட்டிட்டு வந்திருப்பேன்“
“அதுக்கில்லைடா விக்ரம் கீர்த்தனாவை விரும்பறானே, அவனே சரியான கோழை, ஏதாவது கஷ்டம்னா மனசு உடைஞ்சி போயிடுவான் உன் காதல் விசயம் தெரிஞ்சா எப்படி அவன் எடுத்துக்குவான்”
“அதான் எனக்குத் தெரியலை தாத்தா”
“சரி அந்த பவியை நீ என்ன நினைக்கற”
“நான் அவளை தங்கச்சியாதான் நினைக்கிறேன்”
“சரி சரி எனக்குப் புரியுது நீ ஒண்ணு பண்ணு விக்ரமையும் பவியையும் கூப்பிடு, நான் அவங்க கிட்ட பேசறேன் அப்புறம் இனிமே விக்ரம் வீட்ல கீர்த்தனா இருக்க வேணாம் அவளோட வீட்ல விட்டுடு”
தொடர்கதை - நெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு - 06 - சசிரேகா
- Details
- Written by: Sasirekha
- Category: Tamil Thodar Kathai
(Reading time:
38 - 76 minutes)
Page 15 of 36