“இல்ல குழப்பத்தில இருக்கேன். அந்த சரண்யா பேசினது, கேட்டா தப்பாபடுது”
“எனக்குப் புரியுது, நான் தாத்தாகிட்ட எல்லாத்தையம் சொல்லிட்டேன் நீ அந்த வீட்ல இனி தங்க வேணாம்”
“ஏன்?”
“பவி உன்னை திட்டி விரட்டறதுக்கா இல்லை விக்ரம் உன்னை விடாம வைச்சிக்கறதுக்கா நீ அங்க இருக்கறது சேப்டி கிடையாது”
“இப்ப நான் எங்க தங்கறது”
“பக்கத்து வீட்டு தாமரை பாட்டி இருக்காங்கள்ல அவங்களோட உனக்கு பழக்கம்தானே”
“ஆமாம்”
“நீ ஒண்ணு பண்ணு, உன் லக்கேஜ் எடுத்துக்க கிளம்பிவா”
“ஆனா பவி கேட்டா நான் என்ன பதில் சொல்றது”
“பவிக்கும் விக்ரமுக்குமான பதிலை தாத்தா சொல்லிக்கறாராம், இப்பதான் சொன்னாரு நீ முதல்ல அந்த வீட்டை விட்டு வெளிய வா, நான் வெளிய நிக்கறேன் வா” என சொல்ல அவளும் போனை கட் செய்துவிட்டு லக்கேஜ்களை எடுக்க ஆரம்பிக்க தாசுடன் தேவா நேராக விக்ரம் வீட்டுக்குச் சென்றான். அங்கு விக்ரம் மற்றும் பவியிடம்
“தாத்தா உங்க ரெண்டு பேரையும் வீட்டுக்கு வரச் சொன்னாரு”
“ஏன் அண்ணா?”
தொடர்கதை - நெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு - 06 - சசிரேகா
- Details
- Written by: Sasirekha
- Category: Tamil Thodar Kathai
(Reading time:
38 - 76 minutes)
Page 18 of 36