(Reading time: 38 - 76 minutes)
Nenjukkulle innaarunnu
Nenjukkulle innaarunnu

சொல்ல 
   
”நான் அவளைப் பார்த்துக்கறேன், இப்ப இருக்கற ஒரே பிரச்சனை கீர்த்தனாவை பத்திரமா ஒரு இடத்தில சேர்க்கனும் அவ்ளோதான் எந்த இடம் அவளுக்கு பாதுக்காப்பா இருக்கும்” என யோசித்துக் கொண்டே இருந்தவருக்கு தாமரை வீடு நினைவுக்கு வரவே
   
”பேசாம பக்கத்து வீட்ல தாமரை இருக்காளே, அவள் பொறுப்பில கீர்த்தானைவை விட்டுடலாம்” என சொல்ல தேவாவிற்கு
   
”ஆனா அந்த வீட்ல இருக்கற டாக்டர் சும்மாயிருப்பாரா ஏற்கனவே அவருக்கும் நமக்கும் ஆகாது”
   
“அவனை விடு. தாமரைகிட்ட அவளை விடு, அவள் பார்த்துக்குவா அந்த டாக்டரோட அனுமதி தேவையில்லை” என சொல்ல தேவா
   
”இதுக்கு தாமரை சம்மதிக்கனுமே”
   
“நீ போய் தாமரையை கேளு”
   
“ம்ஹூம் அது சரியா வராது, நான் கீர்த்தீ கொண்டு போய் தாமரை வீட்ல விட்டுடறேன், அப்புறமா விக்ரமையும் பவியையும் கூட்டிட்டு வந்து உங்ககிட்ட விடறேன் முதல்லயே விக்ரமுக்கு உண்மை தெரிஞ்சா பவி இருக்கற கோபத்துக்கு கீர்த்தனாவை திட்டிடுவா”
   
“சரி சரி அப்ப முதல்ல கீர்த்தனாவை கூட்டிட்டு போய் தாமரைகிட்ட விடு” என சொல்ல அவனும் சரியென தலையாட்டிவிட்டு வெளியே வந்தவன் தாஸிடம் தாத்தா சொன்னதைச் சொல்ல அவனும் நிம்மதி என சைகை செய்யவும் தேவா கீர்த்தனாவிற்கு போன் செய்தான்.
   
”ஹலோ”
   
“எப்படியிருக்க பயந்துக்கிட்டா இருக்க”

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.