”இந்த வீட்டு பொண்ணு பவியோட பிரெண்டாச்சே”
“உனக்கெதுக்கு, நீ பாட்டி கூட இரு, உனக்கு ஒருவேளை இங்க தங்க கஷ்டமா இருந்தா, நீ உடனே என் வீட்டுக்கு வந்துடு யாரும் உன்னை தடுக்க மாட்டாங்க” என சொல்ல அவளும் அதற்குச் சரியென்றாள்.
தேவாவும் கீர்த்தனாவும் வீட்டு கேட் வாசலில் நின்றுக் கொண்டு பேசுவதைக் கண்ட சுந்தரம் குழப்பத்துடனும் சந்தேகத்துடனும் பார்த்தார்.
”என்ன இவன் இங்க நிக்கறான், ஆளைப்பாரு அப்படியே வைத்தியை போலவே இருக்கான், இவனை கண்டாலே அவன் ஞாபகம்தான் வருது, இந்த பொண்ணு யாரு அன்னிக்கி கோயில்ல பாட்டு பாடினவதானே, இவளை கூட்டிட்டு இங்க வந்து நிக்கறான். லவ் பண்றானா என்ன ஓ வீட்டை விட்டு வந்துட்டானோ இருக்கலாம் இருக்கலாம் சரி அதுக்கு எதுக்கு இந்த வீட்டுக்கு வரனும்” என நினைத்துக் கொண்டவர், அவர்கள் உள்ளே நுழைவதைக் கண்டு அமைதியாக காத்திருந்தார்.
உள்ளே வந்த தேவாவோ அங்கு சுந்தரம் இருப்பதைக் கண்டு அதிர்ந்து
”சே இவர் இங்கதான் இருக்காரா வேலைக்கு போகாம இங்க என்ன செய்றாரு” என குழம்பினான். கீர்த்தனாவோ
”என்னாச்சி வாங்க போலாம்”
“இரும்மா அங்க பாரு யார் இருக்கான்னு, இவர்கிட்ட மாட்டினா ஆயிரம் கேள்வி கேட்பாரே என்ன செய்றது”
“அப்ப வாங்க நாம வேற எங்கயாவது தங்கிக்கலாம்” என சொல்ல அவனும் சரியென திரும்ப தடுத்தார் சுந்தரம்
தொடர்கதை - நெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு - 06 - சசிரேகா
- Details
- Written by: Sasirekha
- Category: Tamil Thodar Kathai
(Reading time:
38 - 76 minutes)
Page 21 of 36