சென்றான் ஒரு வேலையாள். அவனைத் தொடர்ந்து அந்த அறைக்குள் சென்ற இருவரையும் வரவேற்றார் டாக்டர் சுந்தரம்
”வாங்க உட்காருங்க” என சொல்ல இருவரும் அமர்ந்தார்கள்.
”உன் பேரு என்னம்மா”
“கீர்த்தனா” என அழைத்துக் கொண்டு வந்தார் தாமரை.
தாமரையைக் கண்டதும் முகம் மலர்ந்தான் தேவா
”உனக்காகத்தான் வந்தேன் தாமரை”
“என்ன விசயம்”
“கொஞ்ச நாளுக்கு இவளை உன்கூட பத்திரமா வைச்சிக்க முடியுமா”
“அதுக்கென்ன நான் பார்த்துக்கறேன்” என இருவரும் பேச தாத்தாவோ உருமினார்
”இங்க நான் இருக்கேன், நான் எடுக்கற முடிவுதான் இந்த வீட்ல செல்லும் அங்க என்ன பேச்சு தேவா உட்காரு” என அதட்ட அவன் நொந்துக் கொண்டே அமர்ந்தான். தாமரையோ கீர்த்தனாவிடம் வந்து நின்றுக் கொள்ள சுந்தரம் தாமரையைக் கண்டு
”நீ போய் வேலையை பாரு”
என சொல்ல அவள் ஒப்புக் கொள்ளாமல் நின்றாள். அதைக்கண்டு சிரித்தான் தேவா. அவனது சிரிப்பை கண்டு வெறுத்த சுந்தரமோ கீர்த்தனாவிடம்
”நீ இங்க தங்கறதுக்கு எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை தாராளமா தங்கலாம் ஆனா, ஒரு கன்டிஷன் அதுபடி நீ இங்க இருக்கனும் முடியுமா”
தொடர்கதை - நெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு - 06 - சசிரேகா
- Details
- Written by: Sasirekha
- Category: Tamil Thodar Kathai
(Reading time:
38 - 76 minutes)
Page 23 of 36