“அப்புறம் அவளுக்கு வேலையிருக்கு, கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனியில வேலை செய்றா அதனால அவள் வேலைக்கு போவா வருவா”
“எதுக்குடா இப்படி அவளை கஷ்டப்படுத்தறா, அதெல்லாம் ஒண்ணும் வேணாம் சீக்கிரமா கல்யாணம் பண்ணிக்கற வழியைப்பாரு” என தாமரை சொல்ல தேவாவும் வேறுவழியில்லாமல் சரியென்றான்.
அடுத்து சுந்தரமோ
”பேசி முடிச்சிட்டீங்களா நான் பேசலாமா” என கேட்க அனைவரும் அமைதியாகவும் சுந்தரம் கீர்த்தனாவிடம்
”இதப்பாரும்மா நல்லா கேட்டுக்க, என் வீட்டை பத்தி நான் சொல்றேன், இங்க இருக்கற நாள்ல நீ நல்லபடியா எல்லார் கூடவும் நடந்துக்கனும் புரியுதா” என அவர் கேட்க அவளும் சரியென்றாள்.
அவரும் தன்னைப் பற்றியும் தன் குடும்பத்தைப் பற்றியும் கூறலானார்.
”நான் ஒரு டாக்டர், டாக்டர் சுந்தரம் எனக்கு சொந்தமா ஆஸ்பிட்டல் இருக்கு, அதோட பேரு தாமரை ஆஸ்பிட்டல். அதுக்கு நான்தான் டீன். எனக்கு 3 பையன்கள், அவங்களும் டாக்டர்கள்தான், 3 மருமகள்கள் இருக்காங்க அவங்களும் டாக்டர்கள்தான், அவங்க எல்லாரும் காலையில ஆஸ்பிட்டல் போனா நைட் ஆகும் திரும்பி வர்றதுக்கு, எனக்கு 2 பேரன் இருக்காங்க ஒருத்தன் ஆஸ்பிட்டல் இன்சார்ஜ், இன்னொருத்தன் மெடிக்கல் டிபார்ட்மெண்ட், ஒரு பேத்தி அவளும் டாக்டர்தான் நாங்க எல்லாரும் ஆஸ்பிட்டல் போன பின்னாடி என் மனைவிதான் இங்க தனியா இருப்பா புரியுதா, நான் என்ன சொல்ல வரேன்னு” என அவர் சொல்ல உடனே புரிந்துக் கொண்டான் தேவா
”ஓ புரியுது வீட்ல யாரும் இல்லாதப்ப கீர்த்தனாவை காவல் காக்கனுமா நான் ரெடி” என சொல்ல சுந்தரம் முறைத்தார்
தொடர்கதை - நெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு - 06 - சசிரேகா
- Details
- Written by: Sasirekha
- Category: Tamil Thodar Kathai
(Reading time:
38 - 76 minutes)
Page 26 of 36