”தேவா நீ அமைதியா இரு, உன்னை யாரும் இங்க கூப்பிடலை சரி சரி நீ கிளம்பு முதல்ல” என வெடுக்கென சொல்ல அவனுக்கு கஷ்டமாகிப் போனது.
கீர்த்தனாவோ தாத்தா சுந்தரத்திடம்
”அவர் போகட்டும் தாத்தா, பரவாயில்லை நான் பத்திரமா இருந்துக்கிறேன் அதான் பாட்டி இருக்காங்களே போதுமே” என சொல்ல அவரும் ஒப்புக் கொண்டார்
”சரி உன் விருப்பம்” என சொல்லிவிட்டு தேவாவை பார்த்தார்
”சரி நீ கிளம்புப்பா” என சொல்ல அவனும் கையெடுத்து கும்பிட்டுவிட்டு அவளைப் பார்க்க அவளோ பாவமாக பார்க்கவே அமைதியாக தாமரையிடம் கண்களாலேயே கீர்த்தனா பத்திரம் என சொல்ல அவரும் சரியென தலையாட்ட அவ்விடம் விட்டு வெளியேறி தன் வீட்டிற்குச் செல்லாமல் கன்ஸ்ட்ரக்ஷன் ஆபிசுக்கு சென்றான். அங்கு இருந்த தாஸிடம் நடந்ததைக் கூறலானான்.
தாஸோ
”விக்ரம்” என சைகை செய்ய உடனே தாஸுடன் அவனைக் காண செல்ல நினைக்க அவனே வந்தான் கோபமாக.
அவனது கோபம் கண்டு தேவா அமைதியாக அவனிடம் பேசினான்
”எனக்கு தெரியும் உனக்கு என்மேல கோபம் வரும்னு ஆனா” என அவன் முடிக்கும் முன்பே
”கீர்த்தனா எங்க?”
என கோபமாக கேட்க
தொடர்கதை - நெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு - 06 - சசிரேகா
- Details
- Written by: Sasirekha
- Category: Tamil Thodar Kathai
(Reading time:
38 - 76 minutes)
Page 27 of 36