(Reading time: 38 - 76 minutes)
Nenjukkulle innaarunnu
Nenjukkulle innaarunnu

மறந்துடாத இப்பவும் சொல்றேன் அவளை நீ விட்டுடு”
   
“ஏன் விடனும் அவளை விட முடியாது 5 வருஷமா நான் அவளை பார்க்கறேன், திடீர்ன்னு 4 நாள்ல நீ அவளை மயக்கிட்டா விடனுமா இல்லை அவள் உன்கிட்ட எதைப்பார்த்தாள்னு எனக்குத் தெரியும், நான் வெறும் ஒர்க்ஷாப்ல மெக்கானிக் அதனால அவள் என்னை ரிஜக்ட் பண்ணிட்டா, நானும் பெரிய கம்பெனியில வேலை பார்த்திருந்தா அவள் எனக்கு ஓகே சொல்லியிருப்பா”
   
“தப்பா புரிஞ்சிக்கிட்டிருக்க அவள் அதெல்லாம் நினைக்கல, நான் ஏழையா இருந்திருந்தா கூட அவள் என்னை விரும்பியிருப்பா”
   
“இல்லை நான் ஒத்துக்க மாட்டேன் நான் அவள்ட்டயே கேட்பேன் இப்பவே போறேன்” என கோபமாக அவள் செல்ல தேவா தாஸை அவன் பின் போகுமாறு சைகை செய்ய அவனும் பின் சென்றான். உடனே தேவா கீர்த்தனாவிற்கு போன் செய்து விவரம் கூறினான்
   
”அய்யோ நான் இப்ப என்ன செய்றது”
   
“தாமரை இருக்காளா”
   
“ம் இருக்காங்க”
   
“அவள்ட்ட போய் சுருக்கமா நம்ம லவ் பத்தி சொல்லிவை, அப்படியே விக்ரம் பத்தியும் சொல்லி வைச்சிடு, அவங்க உன்னை பார்த்துக்குவாங்க தாசும் வரான் நீ பயப்படாத”
   
“நீங்க வரலையா”
   
நான் வந்தா விக்ரம் இன்னும் பிரச்சனையை பெரிசாக்குவான்” என சொல்ல அவளும் சரியென போனை வைத்தவள் நேராக பாட்டியிடம் சென்றாள்
   
”பாட்டி பாட்டி” என பயத்துடன் தாமரையிடம் பேச அங்கிருந்த சுந்தரம் அதைப்பார்த்துவிட்டு ஒளிந்து நின்று பார்க்கலானார்

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.