குழம்பினார்கள் சில நிமிடங்களில் பவி தேவாவிடம்
”சரி இப்ப என் காதலை நான் சொல்றேன் நான் உங்களை” என அவள் முடிக்கும் முன்பே
”உனக்கு அறிவில்லையா இப்பதானே சொல்றேன், நான் கீர்த்தானை லவ் பண்றேன்னு நீ இப்படி சொல்றியே அவளை விட்டு உன்கிட்ட வந்துடுவேன்னு எப்படி நீ நினைக்கலாம் சொல்லு, அதுவும் இல்லாம உன்னை நான் பார்த்தப்ப ஸ்கூல் படிச்சிட்டு இருந்த அப்ப எனக்கு தங்கச்சியில்லாத குறையை தீர்க்க நீயிருக்கன்னு உன் அண்ணன்கிட்டயே நான் சொல்லியிருக்கேன் கேட்டுப் பாரு கேளு கேளும்மா” என சொல்ல அவளும் விக்ரமை பார்க்க அவனோ
”ஆமாம்” என சொல்ல பவி கண்கள் கலங்கி உடனே அங்கிருந்து வெளியே சென்றுவிட்டாள் அவள் சென்றதும்
”பவி தப்பா ஏதாவது செஞ்சிக்கிட்டா அதுக்கு நீதான் பொறுப்பு”
“அடிச்சி சொல்றேன் உன் தங்கச்சி தப்பா எதுவும் செஞ்சிக்க மாட்டா, அவள் கோழை கிடையாது ஆனா நீதான் கோழை என் பயமே நீ ஏதாவது செஞ்சிக்குவியோன்னுதான்”
“நான் ஏன் தற்கொலை பண்ணிக்கனும் எனக்கு இன்னும் நிறைய வாய்ப்புகள் இருக்கு, நான் கீர்த்தனாகிட்ட பேசத்தான் போறேன். அவள்ட்ட நான் கேட்பேன் என்ன என்கிட்ட இல்லை எதனால என்னை உனக்குப் பிடிக்கலைன்னு கேட்பேன்”
“லூசாடா நீ அவளும் என்னைப் போலவே நினைச்சிருப்பா எப்படி பவியோட அண்ணன் நீங்கறதால கூட அவள் உன்னை தன் அண்ணனா நினைச்சிருக்கலாம் தப்பில்லையே”
“இல்ல நீ ஏதோ சதி பண்ணிட்ட, அவள் மனசை கலைக்கற முதல் நாள் அவள் வந்தப்பவே நீ சொன்னது எனக்கு நினைவு இருக்கு, எப்படியாவது அவளை உன் வீட்ல தங்க வைக்கனும்னு நீ பேசினப்பவே நான் சுதாரிச்சிருந்திருக்கனும் சும்மா விட்டது என் தப்பு”
“அவளும் நான் கூப்பிட்டததும் வரேன்னுதான் இருந்தா, அதுக்குள்ள நீ தடுத்துட்ட அதை
தொடர்கதை - நெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு - 06 - சசிரேகா
- Details
- Written by: Sasirekha
- Category: Tamil Thodar Kathai
(Reading time:
38 - 76 minutes)
Page 30 of 36