(Reading time: 38 - 76 minutes)
Nenjukkulle innaarunnu
Nenjukkulle innaarunnu


   
”என்னம்மா என்னாச்சி ஏன் அழற”
   
“இல்லைம்மா அந்த அந்த விக்ரம் விக்ரம்”
   
“இரு இரு பொறு என்னாச்சி என்ன ஆச்சி அமைதியா சொல்லு அமைதி”
   
என சொல்ல அவளும் சில நொடிகள் மூச்சை பிடித்து இழுத்துக் கொண்டு மெதுவாக பேசினாள்
   
”பாட்டி நான் தேவாவை விரும்பறேன், அவரை கல்யாணம் செஞ்சிக்கவும் ஆசைப்படறேன், அவர் வீட்லயும் ஒத்துக்கிட்டாங்க”
   
“அப்படியா அவங்க வீட்ல ஒத்துக்கிட்டா உன்னை ஏன் இங்க கொண்டாந்து விடனும்”
   
“காரணம் இருக்கு அந்த வீட்ல சரண்யான்னு ஒரு பொண்ணு தங்கினா, அவள் தேவாவை விரும்பினா, இன்னிக்கு காலையில பெரிய சண்டை எங்க காதல் விவகாரம் தெரிஞ்சதும் அந்த பொண்ணு கோபமா வெளிய போயிட்டா, அவளால எனக்கு ஏதாவது பிரச்சனை வரும்னு நினைச்சி”
   
“இங்க கொண்டாந்து விட்டானா தேவா இல்லையே அந்த வீட்லயே நல்ல பாதுகாப்பு கிடைக்குமே”
   
“இங்க கொண்டாந்து விட்டதுக்கு 2 காரணம் இருக்கு, ஒண்ணு சரண்யா அவளோட அண்ணன் சரண், தேவா அப்பாவோட ஒரு பிசினிஸ் டீலிங் வைச்சிருக்கான் என்னால அது கெடக்கூடாது, இன்னொன்னு விக்ரம் தேவாவோட பிரெண்ட் அவன் என்னை லவ் பண்றான் அவனோட தங்கச்சிதான் பவி, அந்த பவி தேவாவை லவ் பண்றா, பவியோட ஹாஸ்டல் ரூம் மேட் நான், அவள் இங்க வரவும் நான் கூடவந்து அவள் வீட்லதான் 4 நாள் தங்கியிருந்தேன். எங்க லவ் மேட்டர் தெரிஞ்சா விக்ரமால பிரச்சனை வரும்னு என்னை இங்க கொண்டாந்து விட்டிருக்காரு. இப்ப விக்ரம் வந்தா என் நிலைமை 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.