”ஏன் என்ன விசயம்?”
“நான் அவள்ட்ட பேசனும்”“
“அவள் பத்திரமா இருக்கா”
“இல்லை நீ ஏதோ பண்ணிட்ட”
“தாத்தா உன்கிட்ட என்ன சொன்னாரோ அதான் உண்மை, அவள் உன்னை விரும்பலை”
“அதை அவள் சொல்லட்டும், நீ சொல்லாத, நீ ஒரு துரோகி” என அவன் மரியாதையின்றி பேசியது பிடித்திருந்தாலும் அதில் இருந்த வெறுப்பு, தேவாவை திணறடிக்க தாஸ் விக்ரமிடம் ஏதோ சைகை செய்ய அதைப் பார்க்க கூட முடியாமல் அவனோ
”போதும் நிறுத்து நான் உன்கிட்ட பேச வரலை போ அப்படி” என அவனைத் தள்ளிவிட தாஸ் தடுமாறவும் உடனே பிடித்துக் கொண்டான் தேவா
”என்னடா வேணும் உனக்கு” என விக்ரமை பார்த்து தேவா கேட்க
”எனக்கு கீர்த்தி வேணும் அவள்ட்ட நானே கேட்கனும் நீ நடுவுல புகுந்து ஏதோ சதி செஞ்சிருக்க”
“ஓ அப்படியா சரி அவளை நான் டாக்டர் பொண்டாட்டி இருக்காளே தாமரை பாட்டி, அவள்கிட்ட விட்டிருக்கேன் போ போய் கேட்டுக்க” என சொல்ல அவனோ முறைத்தான்
”என் தங்கச்சி வாழ்க்கையை இப்படி நீ நாசமாக்கலாமா” என கேட்க அதற்கு பதில் சொல்லும் முன் பவியே வந்தாள்
”அண்ணா அந்த கேள்வி நான் கேட்கனும்” என சொல்லிக்கொண்டே தேவாவிடம் வந்து
தொடர்கதை - நெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு - 06 - சசிரேகா
- Details
- Written by: Sasirekha
- Category: Tamil Thodar Kathai
(Reading time:
38 - 76 minutes)
Page 28 of 36