(Reading time: 38 - 76 minutes)
Nenjukkulle innaarunnu
Nenjukkulle innaarunnu


”என்னை கட்டாயப்படுத்த உங்களால முடியாது”
   
“அப்புறம் எதுக்காக இங்க இவளை கூட்டிட்டு வந்த”
   
“இப்படி இங்க ஒரு விசயம் நடக்கும்னு எனக்குத் தெரியாது, இங்க இவள் இருந்தா பாதுகாப்பா இருப்பா, கல்யாணம் வரைக்கும் இங்க தங்க வைக்கலாம்னு நினைச்சேன், நான் தாமரையை நம்பி இவளை கூட்டிட்டு வந்தேன். அவ்ளோதான் நீங்க இப்படியெல்லாம் நடந்துக்குவீங்கன்னு எனக்குத் தெரியாதே”
   
“இதப்பாருப்பா 2 நாளோ 2வாரமோ எத்தனை நாளோ இவள் இங்க இருந்துதான் ஆகனும் முடியலைன்னா இவளை கூட்டிட்டு நீ தாராளமா போலாம்” என அவர் கத்த தேவா உடனே எழுந்தான் தாமரை உடனே அடக்கினாள்
   
”இரு தேவா என்ன அவசரம், நான் இருக்கேன்ல பொறுமையா இரு, அவசரப்படாத நான் அவளை பார்த்துக்கறேன்”
   
“ஆனா தாமரை நான் அவளை பார்க்காம எப்படி இருக்கறது”
   
“அதெல்லாம் அப்புறம் கல்யாணம் ஆகட்டும், அவ்ளோ அவசரம்னா சீக்கிரமா கல்யாணத்தை நடத்து இல்லைன்னா வேற எவனாவது வந்து பொண்ணை தூக்கிட்டு போயிடப்போறான்“ என தன் கணவனை பார்த்துக்  கொண்டே தாமரை சொல்ல தேவா அதற்கு சம்மதித்தான்
   
”சரி தாமரை நான் எப்படியாவது சீக்கிரமா நல்ல நாள் குறிச்சிடறேன். சீக்கிரமாவே கல்யாணத்துக்கு ஏற்பாடு செய்றேன், அதுவரைக்கும் இவளை பத்திரமா பார்த்துக்க ஆனா ஒண்ணு நான் அடிக்கடி வருவேன், அவளை பார்த்துட்டு போயிடுவேன் வேற எந்த தப்பையும் நான் செய்ய மாட்டேன்”
   
“நான் உன்னை நம்பறேன், நீ ஏன் இப்படி பேசற, நீ வா என்கிட்ட பேசு என்கூட இருக்கற இவள்ட்ட பேசு”

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.