(Reading time: 38 - 76 minutes)
Nenjukkulle innaarunnu
Nenjukkulle innaarunnu


”இதப்பாரு அவன் மேல ஏன் பாயற முதல்ல இவள் மனசுல யார் இருக்கான்னு தெரிஞ்சிக்காம நீயா அவள் மேல ஆசைப்படறது தப்பு”
   
“அண்ணா என்ன அண்ணா சொல்றீங்க”
   
“இப்ப சொல்ல எனக்கு நேரமில்லை, நான் சொன்னாலும் நீ தப்பா நினைப்ப உனக்காக தாத்தா காத்திட்டு இருக்காரு, நீயும் பவியும் போய் பேசிட்டு வாங்க, அப்புறமா நாம பேசிக்கலாம்” என சொல்ல விக்ரமோ கீர்த்தனாவிடம்
   
”நீ எங்க போற?”
   
“நான் தாமரை பாட்டி வீட்டுக்குப் போறேன், இதுக்கப்புறம் என்னால இங்க இருக்க முடியாது” என சொல்ல பவியோ
   
”என்ன காரணம் என்கூட இங்க வந்துட்டு அங்க ஏன் தங்கனும், அண்ணாவுக்காக நீ இப்படி செய்றியா”
   
“ஆமாம்” என அவள் சொல்ல கலங்கினான் விக்ரம், உடனே அவளிடம் பேச வர தாஸ் தடுத்தான். அவசரமாக கீர்த்தனாவை அழைத்துக் கொண்டு வெளியே செல்ல அதைப்பார்த்த தேவாவோ
   
”தாத்தாவை போய் பாரு அப்புறம் என்னை வந்து பாரு” என சொல்லிவிட்டு அவசரமாக வெளியே சென்றவன் கீர்த்தனாவுடன் நேராக தாமரை வீட்டுக்குச் சென்றான். அங்கு தாஸை வெளியேவே இருக்கும்படி சொல்லிவிட்டு கீர்த்தனாவிடம்
   
”பயப்படாத நீ யார்கிட்டயும் சேராத, பாட்டிகூடயே இரு சரியா” என சொல்ல அவளும் 
   
”நம்ம லவ் பத்தி அவங்ககிட்ட சொல்லலாமா வேணாமா”
   
“தாராளமா சொல்லு“

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.